2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சம்பியனாகியது மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை

குணசேகரன் சுரேன்   / 2018 மே 06 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது கல்லூரியின் மறைந்த முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் ஜெயக்குமார் கீர்த்திகன் ஞாபகார்த்தமாக, யாழ். மாவட்ட பாடசாலைகளின் ஆண்கள், பெண்கள் கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் கொக்குவில் இந்துக் கல்லூரி தமது கூடைப்பந்தாட்டத் திடலில் நடத்திய கூடைப்பந்தாட்டத் தொடரில் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை சம்பியனாகியது.

10 பாடசாலைகள் பங்குபற்றிய இத்தொடரின் அரையிறுதியில் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை, கொக்குவில் இந்துக் கல்லூரியை வென்றும் யாழ். மத்திய கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரியை வென்றும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற யாழ். மத்திய கல்லூரிக்கெதிரான இறுதிப் போட்டியின் முதற்காற்ப்பகுதி மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலையின் கைகளில் இருக்க அப்பாடசாலை, 21-13 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது காற்பகுதியில், யாழ். மத்திய கல்லூரி சிறப்பாக விளையாடியபோதும் இக்காற்பகுதி முடிவிலும் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை, 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

மூன்றாவது காற்பகுதியில் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை, இக்கால்பகுதி முடிவில் 43-33 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்நிலையில், நான்காவது கால்பகுதி யாழ். மத்திய கல்லூரியின் கைகளில் இருந்தது. அடுத்தடுத்து, புள்ளிகளைப் பெற்ற யாழ். மத்திய கல்லூரி ஒரு கட்டத்தில் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலையின் புள்ளிகளை முந்திய நிலையில் இருந்தது. எனினும், இறுதி செக்கன்களில் தங்கள் வெற்றிக்குத் தேவையான புள்ளிகளைப் பெற்ற மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை, 57-56 என்ற புள்ளிகள் கணக்கில் இறுதியில் வென்று, மூன்றாவது முறையாக இத்தொடரில் தொடர்ச்சியாக சம்பியனாகியது.

இவ்விறுதிப் போட்டியில் 26 புள்ளிகளைப் பெற்ற மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலையின் யோகநாதன் சிம்ரோன் இறுதிப் போட்டியின் நாயகனாகவும் யாழ். மத்திய கல்லூரியின் உதயகுமார் சங்கீர்த்தனன் தொடரின் நாயகனாகவும் தெரிவாகினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .