2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சம்பியனாகியது ஸ்ரீ ஜயவர்தனபுர

குணசேகரன் சுரேன்   / 2017 ஜூன் 18 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இவ்வாண்டு கிரிக்கெட் தொடரில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் சம்பியனாகியது. அந்தவகையில், இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் சம்பியனாகும் இரண்டாவது தடவை இம்முறையாகும்.  

இற்றைக்கு 13 ஆண்டுகளுக்கு முன்னரே, இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் சம்பியனாகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், மீண்டும் சம்பியனாகக் கிடைத்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தில், முழுமையான போராட்டத்தை வெளிப்படுத்தியும், தோல்வியைச் சந்தித்தது.   

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான குறித்த இறுதிப் போட்டி, கொழும்பு பல்கலைக்கழக மைதானத்தில், நேற்று  (17) நடைபெற்றது. இதில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியை எதிர்த்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அணி மோதியது.  

நாணயச் சுழற்சியில் வென்ற ஸ்ரீ ஜயவர்தனபுர அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதற்கிணங்க, முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில், யோகேஸ்வரன் 48, கபில்ராஜ் 35, துவாரகசீலன் 34 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கருணாரட்ண 4, கலஹிட்டியாவ, பெர்ணான்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.  

பதிலுக்கு, 172 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அணி, 44.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், சண்டகெலும் ஆட்டமிழக்காமல் 35, வெட்டிசிங்ஹ 30, பெர்ணான்டோ 28 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜனந்தன், லோகதீஸ்வரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.  

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியின் பயிற்றுநராக, டானியல் மதியழகன் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .