2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சம்பியனானது இராகலை டெல்மார் மெலோடியன்ஸ்

Editorial   / 2019 ஜூலை 16 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஆ. ரமேஸ்

இலங்கையின் தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்தை,
பெருந்தோட்டப் பகுதிகளில்   இளைஞர்களிடத்தே ஊக்கப்படுத்தும் வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அனுசரணையுடன் இராகலை டெல்மார் மத்திய பிரிவில் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டத் தொடரில் டெல்மார் மெலோடியன்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

டெல்மார் தோட்ட மெலோடியன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில், வலப்பனை பிரதேச சபையின் உறுப்பினர் ஜி. லிங்கேஸாவரன் தலைமையில் கடந்த சனிக்கிழமை முதல் இடம்பெற்றுவந்த மத்திய, ஊவா மாகாண 19 கரபந்தாட்ட அணிகள் பங்கேற்ற இத்தொடரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 25-22, 25-20 என்ற நேர் செட்களில் ஊவா மாகாண உடப்புசலாவை கஹம்பா தோட்ட சக்தி விளையாட்டுக் கழகத்தை வென்றே டெல்மார் மெலோடியன்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

இந்நிலையில், இத்தொடரில் மூன்றாமிடத்தை உடப்புஸ்லாவை டலோஸ் ஸ்டார் லைட் விளையாட்டுக் கழகம் பெற்றுக் கொண்டது.

இதேவேளை, இறுதிப் போட்டியின் நாயகனாக வீ. நிரஞ்சன், தொடரின் நாயகனாக எ. ஜெகன், சிறந்த பந்து தடுப்பாளராக ஜி. லிங்கேஸ்வரன் ஆகியோர் தெரிவாகினர்.

சம்பியனான டெல்மார் மெலோடியன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு 50,000 ரூபாய், வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்ட நிலையில அதை அணித்தலைவர் என். சுலைமான் பெற்றுக்கொண்டார்.

இரண்டாமிடத்தைப் பெற்ற சக்தி விளையாட்டுக் கழகத்துக்கு 30,000 ரூபாய், வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்ட நிலையில் அதை அவ்வணியின் தலைவர் எம். சண்முகசெல்வம்
(டிகோ) பெற்றுக்கொண்டார்.

மூன்றாமிடத்தைப் பெற்ற ஸ்டார் லைட் விளையாட்டுக் கழகத்துக்கு 10,000 ரூபாய் பணம், வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்ட நிலையில் அதை அவ்வணித்தலைவர் கே. ஜனார்த்தனன் பெற்றுக்கொண்டார்.

சம்பியனான, இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற அணிகளுக்கான பரிசில்களை தமது சொந்த நிதியில் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ், நுவரெலியா மாநகரசபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சிவன்ஜோதி யோகராஜா, இராகலை அம்பிகா ஜூவலரி உரிமையாளர் எஸ். செல்வகுமார் ஆகியோர் வழங்கிவைத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .