2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சம்பியனானது இளவாலை யங்ஹென்றிஸ்

குணசேகரன் சுரேன்   / 2019 மே 13 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட மாகாண ரீதியில், தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு ஏழு பேர் கொண்ட விலகல் முறையிலான கால்பந்தாட்டத் தொடரில் இளவாலை யங்ஹென்றிஸ் சம்பியனானது.

உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற 46 அணிகள் பங்குபற்றிய இத்தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் திருக்குமரன் விளையாட்டுக் கழகமும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இளவாலை யங்ஹென்றிஸ் விளையாட்டுக் கழகமும் வென்றிருந்தன.

தொடர்ந்து, போட்டிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பிரச்சினைகள் காரணமாக மீள் அரையிறுதிப் போட்டியொன்று நடத்தப்பட்டது. அந்த அரையிறுதிப் போட்டியில் வென்ற திருக்குமரன் விளையாட்டுக் கழகமும், ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக் கழகமும் மோதின. இதில் ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக் கழகமும் வென்றது.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஆனைக்கோட்டை யூனியன் அணியை எதிர்த்து இளவாலை யங்ஹென்றிஸ் அணி மோதியது.

முதற்பாதியில் யங்ஹென்றிஸ் விளையாட்டுக் கழகம் இரண்டு கோல்களைப் பெற்றது. இரண்டாவது பாதியில் யங்ஹென்றிஸ் விளையாட்டுக் கழகம் மேலுமொரு கோலைப் பெற பதிலுக்கு யூனியன் விளையாட்டுக் கழகமும் ஒரு கோலைப் பெற்றது. எனினும், இறுதி வரையில் சிறப்பாக விளையாடிய யங்ஹென்றிஸ் விளையாட்டுக் கழகம், மேலுமொரு கோலைப் பெற்று இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியனானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .