2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சம்பியனானது உடப்புசலாவ சென். மாக்ரட்

சுஜிதா   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேட்ரன் கிண்ணத்துக்கான இவ்வாண்டுத் தொடரில், உடப்புசலாவ சென்.  மாக்ரட் கிரிக்கெட் கழகம் சம்பியனானது.

அணிக்கு ஏழு பேர் கொண்ட இம்மென்பந்து கிரிக்கெட் தொடர், உடப்புசலாவ விமலதரம் விளையாட்டு மைதானத்தில், கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

இந்நிலையில், 32 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு
உடப்புசலாவ சென். மாக்ரட் கிரிக்கெட் கழகமும் லூனுவத்த பிளக் ஈகிள் அணியும் தகுதிபெற்றன.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பிளக் ஈகிள் அணி, 5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 33 ஓட்டங்களைப் பெற்றது.  பதிலுக்கு, 34 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சென். மார்க்ரட் அணி மூன்று ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

இத்தொடரின் நாயகனாகவும் விருதையும் இறுதிப் போட்டியின் நாயகனாகவும் சென். மாக்ரட் அணியின் யோகேஸ்வரன் தெரிவானார். தொடரின் சிறந்த களத்தடுப்பாளராக மாவனும் சிறந்த துடுப்பாட்ட வீரராக சரணும் மிக நீண்ட தூரத்துக்கு பந்தை அடித்து ஆறு ஒட்டங்களைப் பெற்றவராக சசிகாந்தும் தெரிவாகினர்.

இத்தொடரை வெற்றிகரமாக நடாத்த ரூபன், ஞானம், வினோத், சதா, பிரதீப், சசிகுமார், பிரசாத், ஆகியோர் பிரதான அனுசரணையாளர்களாக செயற்பட்டுள்ளனர்.

இறுதிப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வில், உடப்புசலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .