2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

சம்பியனானது கொக்குவில் இந்துக் கல்லூரி

குணசேகரன் சுரேன்   / 2019 ஜூன் 03 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில், பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்படும் பெரு விளையாட்டுப் போட்டிகளில், 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் கொக்குவில் இந்துக் கல்லூரி சம்பியனானது.

கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த இப்பெருவிளையாட்டுக்களில் எட்டு அணிகள் பங்கேற்ற விலகல் முறையிலான குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையை வென்றே கொக்குவில் இந்துக் கல்லூரி சம்பியனாகியிருந்தது.

இறுதிப் போட்டியின் முதல் கால் பகுதி முடிவில் 13-12 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்த கொக்குவில் இந்துக் கல்லூரி, இரண்டாவது கால் பகுதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி முதற்பாதி முடிவில் 25-15 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

அந்தவகையில், மூன்றாவது கால் பகுதியிலும் முன்னிலையைத் தொடர்ந்து அக் கால் பகுதி முடிவில் 40-26 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் காணப்பட்ட கொக்குவில் இந்துக் கல்லூரி, அடுத்ததான இறுதிக் கால் பகுதியில் வேம்படி உயர்தரப் பாடசாலையும் தம்மளவான புள்ளிகளைப் பெற்றபோதும் தமது முன்னைய முன்னிலை காரணமாக இறுதியில், 57-43 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது.

இறுதிப் போட்டியின் சிறந்த வீராங்கனையாக, கொக்குவில் இந்துக் கல்லூரியின் கமலதாஸ் தமிழரசி தெரிவானார்.

இத்தொடரின் மூன்றாமிடத்துக்கான போட்டியில், திருக்குடுப்ப கன்னியர் மடத்தை 24-23 என்ற புள்ளிகள் கணக்கில் மயிரிழையில் வென்ற யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .