2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சம்பியனானது கொழும்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 02 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 லீக்கில் கொழும்பு அணி சம்பியனானது. கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்றிரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில் தம்புள்ளை அணியை வென்றே கொழும்பு அணி சம்பியனானது.

குறித்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தம்புள்ளை அணியின் தலைவர் இசுரு உதான, தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், றமித் றம்புக்வெல 57 (40), ஹசித பொயாகொட 40 (26), வனிடு ஹசரங்க 22 (18) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜீவன் மென்டிஸ், அகில தனஞ்சய ஆகியோர் தலா 2, ஷம்மு அஷான், கமிந்து மென்டிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

164 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி, 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 1.4 ஓவர்கள் இருக்கையில் 7 விக்கெட்டுகளால் வென்றது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் உபுல் தரங்க ஆட்டமிழக்காமல் 104 (55), ஷெகான் ஜெயசூரிய ஆட்டமிழக்காமல் 35 (22) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டில்ருவான் பெரேரா, அமில அப்போன்ஸோ, இசுரு உதான ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .