2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சம்பியனானது சப்ரகமுவ

Editorial   / 2017 மே 28 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


 

- சந்துன் கொடிதுவக்கு
மாகாணங்களுக்கிடையிலான 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான, ஏழு பேர் கொண்ட றக்பி தொடரில், சப்ரகமுவ மாகாணம், நேற்று (27) சம்பியனாகியுள்ளது.   

வெலிசறையிலுள்ள கடற்படை மைதானத்தில், அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், 5-0 என்ற புள்ளிகள் கணக்கில், மேல் மாகாணத்தைத் தோற்கடித்தே, சப்ரகமுவ மாகாணம் சம்பியனாகியுள்ளது.   

இலங்கை றக்பி சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட இத்தொடரில், எட்டு மாகாண அணிகள் பங்கேற்றிருந்தன.   

இத்தொடரின் சிறந்த வீராங்கனையாக, சப்ரகமுவ மாகாணத்தின் சனோஜா குமாரி றணசிங்க தெரிவாகியிருந்தார்.   

இறுதிப் போட்டிக்கு பிரதம விருந்தினராக, இலங்கை றக்பி சங்கத்தின் உறுப்பினரும் SAGT-இன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரியுமான டெட் முத்தையா கலந்துகொண்டிருந்தார்.   

இத்தொடரின் பிளேட் சம்பியன்களாக, ஊவா ஏ அணியை, 10-5 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து, கிழக்கு ஏ அணி தெரிவாகியிருந்தது. போல் சம்பியன்களாக, வயம்ப மாகாண அணியை, 10-5 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து, தெற்கு ஏ அணி தெரிவாகியிருந்தது. ஷீல்ட் சம்பியன்களாக, மத்திய மாகாணத்தை, 10-0 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து, வட மத்திய மாகாணம் சம்பியனாகியிருந்தது.   

வீராங்கனைகளுக்கு போட்டிச் சந்தர்ப்பங்களை வழங்குவதோடு, டுபாய் சுற்றுப்பயணத்துக்கான தேசிய 18 வயதுக்குட்பட்டோருக்கான அணியைத் தெரிவு செய்வதே, இத்தொடரின் பிரதான நோக்கமாக இருந்ததாக, பெண்கள் றக்பி வளர்ச்சிக்கன தலைவர் கேணல் தம்மிக குணசேகர தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .