2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சம்பியனானது சென். ஜோன்ஸ் கல்லூரி

குணசேகரன் சுரேன்   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், பாடசாலைகளின் 17 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் சென். ஜோன்ஸ் கல்லூரி சம்பியனானது.

சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று  நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரியை வென்றே சென். ஜோன்ஸ் கல்லூரி சம்பியனானது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி, 42.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பிரணவன் 36, டினோசன் 30, சங்கீர்த்தனன் 29, வினோஜன் 17 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டினேஸ் 5, தனோஜா 3, கௌதமன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 168 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்துக் கல்லூரி அணி, 43.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று 38 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், ஜனார்த்தனன் 41 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், டினோசன் 3, சரண், அபிரன்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்நிலையில், சிறந்த துடுப்பாட்டவீரராக கொக்குவில் இந்துக் கல்லூரியின் எஸ். ஜனார்த்தனன், சிறந்த பந்துவீச்சாளராக கொக்குவில் இந்துக் கல்லூரியின் எஸ். டினேஸ்குமார், சிறந்த களத்தடுப்பாளராக கொக்குவில் இந்துக் கல்லூரியின் பி. பிரவீன், சிறந்த சகலதுறைவீரராக மற்றும் போட்டியின் நாயகனாக ரி. டினோசன் தெரிவாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .