2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சம்பியனானது யாழ். மத்திய கல்லூரி

குணசேகரன் சுரேன்   / 2019 ஜனவரி 17 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்ட விளையாட்டுச் சங்கத்தின் ஏற்பாட்டில், பாடசாலைகளின் 19 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டத் தொடரில் யாழ். மத்திய கல்லூரி சம்பியனானது.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் தேசிய ரீதியில் பலமான அணியாகவுள்ள சென். பற்றிக்ஸ் கல்லூரியை வீழ்த்தியே யாழ். மத்திய கல்லூரி சம்பியனானது.

இப்போட்டியில் சென். பற்றிக்ஸ் அணியின் நட்சத்திரவீரர் சாந்தன் தனதணிக்கான முதலாவது கோலைப் பெற்றார். அதன்பின்னர், சென். பற்றிக்ஸ் அணியின் ஆதீக்கமே மைதானத்தில் நீடித்த போதிலும் மேலதிகமாக கோலெதுவும் பெறப்படவில்லை. முதற்பாதி வரையில் அக்கோலே நீடித்தது.

இரண்டாவது பாதியில் யாழ். மத்திய கல்லூரியின் ஆட்டத்தில் உத்வேகம் ஏற்பட்டிருந்தது. கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பொன்றை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் றேம்சன் கோலாக்கினார். தொடர்ந்து யாழ். மத்திய கல்லூரியின் விக்னேஸ் அசத்தலான கோலொன்றைப் பெற அவ்வணி முன்னிலை பெற்றது.

போட்டி முடிவடையும் தருணத்தில் சென். பற்றிக்ஸ் கல்லூரக்கு, பெனால்ட்டி வாய்ப்பொன்று கிடைக்கப்பெற்றது. எனினும், அதனை சாந்தன் கோலாக்கத் தவறி கோல் கம்பத்துக்கு மேலால் செலுத்த சென். பற்றிக்ஸ் அணியின் ஆதீக்கம் முடிவுக்கு வந்து, யாழ். மத்திய கல்லூரி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியனானது.

இத்தொடரின் நாயகனாக யாழ். மத்திய கல்லூரியின் ஜூட்டிலக்சனும் சிறந்த கோல் காப்பாளராக சென். பற்றிக்ஸ் கல்லூரியின் டிலக்சனும் இறுதிப் போட்டியின் நாயகனாக யாழ். மத்திய கல்லூரியின் றேம்சனும் தெரிவாகினர்.

இத்தொடரின் மூன்றாமிடத்துக்கான போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி, போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தமையால், இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X