2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’சஹீரியன்ஸ் பெட்மின்டன் ஸ்மெர்ஷஸ் ’ இரட்டையர் அணி சம்பியன்

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2003 க.பொ.த. சாதாரண தரம் மற்றும் 2006 உயர்தர பழைய மாணவர் அமைப்பான  'ஸஹிரியன் டியுட்ஸ்' மாணவர்களால் ஏற்பாடாகியிருந்த'சஹீரியன்ஸ் பெட்மின்டன் ஸ்மெர்ஷஸ் 2019' பூ பந்து போட்டி தொடரில் ஸஹிரியன் ஷட்டுல் மாஸ்டர்ஸ் இரட்டையர் அணியினர் சம்பியனாகியுள்ளனர். 

இந்த போட்டி தொடர் அ  புத்தளம் மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

புத்தளம் ஸாஹிராவிலிருந்து வெளியாகிய மாணவர் குழுக்களில் மொத்தமாக 32 அணிகள் இந்த தொடரில் பங்கு கொண்டன. போட்டிகள் யாவும் விலக்கல் முறையில் நடைபெற்றது.

இறுதி சுற்றுப்போட்டியில் லெஜன்ட்ஸ் அணியும் ஷட்டுல் மாஸ்டர்ஸ் அணியும் தகுதி பெற்றன. இந்த போட்டியில் ஷட்டுல் மாஸ்டர்ஸ் இரட்டையர் அணி 21:9, 21:18 என்ற கணக்கில் வெற்றியை தனதாக்கிக் கொண்டதன் மூலம் சம்பியனாக மகுடம் சூடியது. 

இறுதிப் போட்டியின் சிறந்த வீரராக ஷட்டுல் மாஸ்டர்ஸ் அணியைச் சேர்ந்த வீரர் எம். ஏ. எம். சுபியானும், தொடரின் சிறந்த வீரராக அதே அணியைச் சேர்ந்த எம்.என். எம். ஷரீக்கும் தெரிவு செய்யப்பட்டனர்.

புத்தளம் பெட்மின்டன் சங்கத்தினைச் சேர்ந்த நடுவர்கள் இந்த போட்டிகளுக்கு நடுவர்களாக கடமையாற்றினர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .