2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜூலையில் ஆரம்பமாகின்றது Cavalry Supercross

Thipaan   / 2017 ஜூன் 03 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மோட்டார் பந்தய நாட்காட்டியில், மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற நிகழ்வுகளுள் ஒன்றான Cavalry Supercross பந்தயத்தின் இவ்வாண்டுக்கான பந்தயம், குருநாகலில், பன்கொல்லவிலுள்ள்ள Cavalry Supercross பந்தயத் திடலில், அடுத்த மாதம் இரண்டாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இலங்கைப் பந்தய மோட்டார் வாகன ஓட்டுநர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் சங்கத்துடன் இணைந்து, இலங்கை இராணுவத்தின் கவசப் படைப் பிரிவாலேயே இப்பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   

2010ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Cavalry Supercross பந்தயமானது, பிரதானமாக, யுத்தத்தில் உயிர்நீத்த அல்லது ஊனமுற்ற படை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு, அவர்களின் நலன்புரி வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியைத் திரட்டுவதற்கு உதவி வருகின்றது. மேலும் படை அதிகாரிகள் மற்றும் வீரர்களின் தங்குமிட வசதி, பணியாற்றும் சூழல், பொழுதுபோக்கு வசதிகள், மருத்துவ வசதி, விடுதி போன்ற உதவிகளும், இப்பந்தயத்தினூடாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

Cavalry Supercross-இன் கடந்தாண்டுப் பந்தயத்தில், மிகச் சிறந்த வாகன ஓட்டுநராக, உஷான் பெரேராவும், மிகச் சிறந்த மோட்டார் சைக்கிள் ஓட்டியாக, இஷான் தசநாயக்கவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். கடந்தாண்டுப் பந்தயத்தின்போது, 12 வாகனப் பந்தயங்கள், 12 மோட்டார் சைக்கிள் பந்தயங்களில், 150க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டுப் போட்டியாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.   

முன்னைய ஆண்டுகளைப் போலவே, மிகச் சிறந்த வாகன ஓட்டுநர், மிகச் சிறந்த மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கு, முறையே, இலங்கை கவசப் படையணி தலைமை அதிகாரியின் சவால் கிண்ணம், Sonna Vander Hoeven ஞாபகார்த்த சவால் கிண்ணம் என்பன, இவ்வாண்டும் வழங்கப்படவுள்ளன.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X