2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

டெக் போல் மன்னாரில் ஆரம்பித்து வைப்பு

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 14 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். றொசேரியன் லெம்பேட்

விளையாட்டுத் துறை அமைச்சால் இலங்கையின் 72ஆவது விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்ட டெக் போல் இன்று மன்னார் மாவட்டத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் இன்று காலை 10.30 மணியளவில் குறித்த விளையாட்டு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் எம். பீரிஸ் லெம்பேட் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது. ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் பிரதி நிதியாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ். கேதீஸ்வரன் கலந்து கொண்டார்.

விருந்தினர்களாக, இலங்கை டெக் போல் திட்டமிடல் முகாமையாளர் சிவராஜா கோபிநாத், இலங்கை தேசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தகவல் தொழில்நுட்ப முகாமையாளர் ரஞ்சித் ஜெயமோகன், இலங்கை டெக் போல் சம்மேளனத்தின் உப தலைவர் வைத்திய கலாநிதி கணேசநாதன், மன்னார் மாவட்ட டெக் போல் இணைப்பாளர் ரி. சிவானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கை டெக் பந்தாட்ட சம்மேளனத்தால், 250,000 ரூபாய் பெறுமதியான டெக் போல் மேசை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறையினை கருத்தில் கொண்டு முதல் கட்டமாக 50 வீரர்கள் நிகழ்வில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .