2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்து செல்கிறது றோயல் முதலாவது XI

Editorial   / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

20 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான, பாடசாலைகளுக்கு இடையிலான றக்பி போட்டிகளில் வெற்றிவாகை சூடிய றோயல் கல்லூரியின் உயர் தரம் கொண்ட முதலாவது XI றக்பி அணி, அதன் திறமைகளை நியூசிலாந்தில் பரீட்சிக்க உள்ளது. KIA மோட்டர்ஸ் (லங்கா) நிறுவனம், Brandix, அங்கர் என்பனவற்றின் துணையோடு இந்த அணி, நியூசிலாந்தில் களமிறங்கவுள்ளது.

செப்டெம்பர் மாதம் எட்டாம் திகதி, இந்த 10 நாள் றக்பிச் சுற்றுலா தொடங்கவுள்ளது. இந்தக் காலப்பகுதியில் ஒக்லாந்து, நோர்த்லாந்து ஆகிய இடங்களில் உள்ள பாடசாலை அணிகளோடு, றோயல் அணி மோதவுள்ளது. 36 பேர் கொண்ட இந்த அணி, நியூசிலாந்து பயிற்றுவிப்பாளர்களால் நடத்தப்படும் பயிற்சி முகாம்களிலும் பங்கேற்கும். மேலும் றக்பி நிபுணர்களால் நடத்தப்படும் இன்னும் பல பயிற்சி நிகழ்வுகளிலும் அவர்கள் பங்கேற்பர்.

நியூசிலாந்தில் உள்ள றோயல் கல்லூரி பழைய மாணவர்களின் கூட்டமைப்பு, இதற்கான ஆதரவை வழங்குகின்றது. பிரத்தியேகமான ஒரு பருவகாலத்துக்கான விருதாக இது அமைந்துள்ளது. இந்தப் பருவகாலப் பகுதியில் றோயல் அணி, அதன் பாரம்பரிய எதிரியான திரித்துவ கல்லூரி அணியை வீழ்த்தி, பிறட்பி கேடயத்தைக் கைப்பற்றி, லீக் சம்பியன் விருதையும் தனதாக்கிக் கொண்டது.

நியூசிலாந்து பாடசாலை அணியுடனான முதலாவது போட்டி, செப்படம்பர் 11இல் இடம்பெறவுள்ளது. றங்கிடோடோ மைதானத்தில் றங்கிடோட்டோ கல்லூரியுடன், இந்த முதலாவது போட்டி இடம்பெறவுள்ளது. இரண்டாவது போட்டி கிங்ஸ் கல்லூரியுடன் செப்டம்பர் 14ல் ஒடாஹுஹுவில் இடம்பெறவுள்ளது.

All Blacks அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சேர் கிரஹம் ஹென்றி, அதே அணியின் முன்னாள் சிறப்பு வீரர் சேர் ஜோன் கிர்வான் மற்றும் ஜோய் ஸ்டேன்லி ஆகியோர் நடாத்தும் சிறப்புப் பயிற்சி நிகழ்ச்சிகளிலும், இந்த அணி பங்கேற்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .