2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

போராடி வென்றது இசிப்பத்தன

Editorial   / 2017 ஜூன் 12 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மைலோ ஜனாதிபதிக் கிண்ணப் போட்டிகளுக்கான காலிறுதிப் போட்டியொன்றில், கண்டி சென். அந்தனீஸ் கல்லூரிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில், இறுதிவரை போராடிய இசிப்பத்தன கல்லூரி, வெற்றிபெற்றது.

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில், நேற்று மாலை இடம்பெற்ற இப்போட்டியில், இந்த நொக் அவுட் தொடரின் 3ஆவது காலிறுதிப் போட்டியாக அமைந்தது.

முதல் 10 நிமிடங்களில், இரு அணிகளும் ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தியிருக்காத நிலையில், 15ஆவது நிமிடத்தில், ஜிதேன் தெலகலவால் பெறப்பட்ட ட்ரை மூலமாக, புள்ளிகளின் எண்ணிக்கையை, அந்தனீஸ் கல்லூரி ஆரம்பித்தது. மேலதிக புள்ளிகளை, சாமுவேல் மதுவந்த தவறவிட்டார்.

தொடர்ந்து, இசிப்பத்தன கல்லூரியின் உமேஷ் ஜயமான்ன, பதிலடியாக, ட்ரை ஒன்றைப் பெற்றார். இதனால், புள்ளிகளின் எண்ணிக்கை சமமமானது. தொடர்ந்து, நதீஷ் சாஹிந்த, ட்ரை ஒன்றைப் பெற, மேலதிக புள்ளிகளை, மணில்கா றுபெரு பெற்றார்.

ஆனால், டினுஜா விக்கிரமாராச்சி, டினேஷ் றொட்ரிகோ இருவரும், இரண்டு ட்ரைகளைப் பெற்று, அந்தனீஸ் அணிக்கு முன்னிலையை வழங்கினர். சாமுவேல் மதுவந்த, மேலதிக புள்ளிகளுக்கான இரண்டு வாய்ப்புகளையும் தவறவிட்டார். இதன்படி, முதற்பாதி முடிவில் 15-12 என்ற புள்ளிகள் கணக்கில், அந்தனீஸ் அணி முன்னிலை வகித்தது.

தொடர்ந்து, றொட்ரிகோவின் ட்ரை, மதுவந்தவின் மேலதிக புள்ளிகளின் துணையோடு, 22-12 என, அந்தனீஸ் அணி முன்னிலை வகித்தது. அத்தோடு, ட்ரொப் கோல் முறையில், மதுவந்த, மேலும் புள்ளிகளைப் பெற, அவ்வணி 25 புள்ளிகளை அடைந்தது.

ஆனால், இசிப்பத்தன அணியின் சுதீர கயந்த, ட்ரை ஒன்றைப் பெற்றார். அதற்குப் பதிலாக, கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்திய மதுவந்த, தனது அணிக்கு 3 புள்ளிகளை வழங்கினார். இதனால், 28-17 என்ற புள்ளிகள் கணக்கில், அந்தனீஸ் அணி முன்னிலை வகித்தது.

அதன் பின்னர் போராடிய இசிப்பத்தன அணி, ரன்டி சில்வா, அஞ்சன துஷான் ஆகியோர் மூலமாக இரண்டு ட்ரைகளைப் பெற்றதோடு, மேலதிக புள்ளிக்கான வாய்ப்புகளில் ஒன்றை, றுபெரு சரியாகப் பயன்படுத்தினார். இறுதியில், 29-28 என்ற புள்ளிகள் கணக்கில், இசிப்பத்தன அணி வெற்றிபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X