2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

முதலிடம் பெற்றது யாழ். மாவட்டம்

Editorial   / 2018 மே 28 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- குணசேகரன் சுரேன், கே. கண்ணன்

வட மாகாண விளையாட்டு விழாவில் யாழ். மாவட்ட முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.

வட மாகாண மாவட்டங்களுக்கிடையிலான 12ஆவது விளையாட்டுப் போட்டிகள், யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த வாரயிறுதியில் வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இவ்விளையாட்டு விழாவில், 79 தங்கம், 54 வெள்ளி, 29 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று முதலிடத்தை யாழ். மாவட்டம் பெற்றிருந்தது. 28 தங்கம், 20 வெள்ளி, 40 வெண்கலப் பதக்கங்களைப் பெற்ற வவுனியா மாவட்டம் இரண்டாமிடத்தையும் 25 தங்கம் 33 வெள்ளி மற்றும் 39 வெண்கலப் பதக்கங்கள் பெற்ற முல்லைத்தீவு மாவட்டம் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன. 22 தங்கம், 35 வெள்ளி, 24 வெண்கலப் பதக்கங்கள் பெற்ற கிளிநொச்சி மாவட்டம் நான்காமிடத்தையும் 13 தங்கம், 15 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்கள் பெற்ற மன்னார் மாவட்டம் ஐந்தாமிடத்தையும் பெற்றன.

இந்நிலையில், சிறந்த தடகள வீரராக, 100 மீற்றர் ஓட்டத்தை 11 செக்கன்களில் ஓடி முடித்த மன்னாரைச் சேர்ந்த எம். பிறேம்தாஸ் தெரிவானதுடன், சிறந்த தடகள வீராங்கனையாக 100 மீற்றர் ஓட்டத்தை 13.50 செக்கன்களில் ஓடி முடித்த மன்னாரைச் சேர்ந்த ஏ. சௌமியா பெர்ணான்டோ தெரிவானார்.

சிறந்த மைதான வீரராக கோலூன்றிப் பாய்தலில் 4.60 மீற்றரைத் தாண்டி சாதனை நிகழ்த்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏ. புவிதரன் தெரிவானதுடன், சிறந்த மைதான வீராங்கனையாக முப்பாய்தலில் 10.70 மீற்றர் தூரம் பாய்ந்த மன்னாரைச் சேர்ந்த ஏ. மேரி தயாநிதி தெரிவானார்.

ஏ. புவிதரன் 4.60 மீற்றர் உயரத்தை தாண்டி முன்னர் இருந்த, 4.40 மீற்றர் என்ற சாதனையை தகர்த்திருந்தார்.

ஆண்களுக்கான உயரம் பாய்தலில் மன்னாரைச் சேர்ந்த பி. நவீன்ராஜ் 1.91 மீற்றர் உயரம் பாய்ந்து, ஏற்கெனவே இருந்த 1.88 மீற்றர் உயரம் என்ற சாதனையை தகர்த்தார்.

ஆண்களுக்கான 4x100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் மன்னார் மாவட்ட அஞ்சலோட்ட அணி, 43.7 செக்கன்களில் ஓடி முடித்து, முன்னர் இருந்த 44.10 என்ற சாதனையை தகர்த்தது.

அதேபோல் பெண்களுக்கான 4x100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் மன்னார் மாவட்ட அஞ்சலோட்ட அணி, 53.4 செக்கன்களில் ஓடி, முன்னர் இருந்த 54.30 செக்கன்கள் என்ற சாதனையை தகர்த்தனர்.

இடம்பெற்ற நிகழ்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் பின்வருமாறு

100 மீற்றர் ஓட்டம்

ஆண்கள்

  1.  எம். பிறேம்தாஸ் - மன்னார்
  2. ஆர். சதீஸன் - யாழ்ப்பாணம்
  3. ரி. விதுசன் – யாழ்ப்பாணம்

பெண்கள்

  1. ஏ. சௌமியா பெர்ணான்டோ – மன்னார்
  2. மேரி தர்சிகா – கிளிநொச்சி
  3.  ஏ. அனுசலா – மன்னார்

200 மீற்றர் ஓட்டம்

ஆண்கள்

  1. எம். பிறேம்தாஸ் – மன்னார்
  2. ரி. விதுசன் – யாழ்ப்பாணம்
  3. ஜே. எஸ்.ராஜன் பெர்ணான்டோ – மன்னார்

பெண்கள்

  1. ஏ. சௌமியா பெர்ணான்டோ – மன்னார்
  2. ஜே. அபிசா – மன்னார்
  1.  ஏ. மேரி தர்சிகா - கிளிநொச்சி

400 மீற்றர் ஓட்டம்

ஆண்கள்

  1. ஜெ.எஸ். ராஜன் பெர்ணான்டோ - மன்னார்
  2. என். நாசாத்கான் - மன்னார்
  3. ஏ. அபினாஸ் - மன்னார்

பெண்கள்

  1. ரி. டென்சிகா - கிளிநொச்சி
  2. கே. குமுதா – வவுனியா
  3.  ஜெ. திருட்சிகா – யாழ்ப்பாணம்

800 மீற்றர் ஓட்டம்

ஆண்கள்

  1. ஆர். கெவின் – முல்லைத்தீவு
  2.  என். கிளாஸ்ரன் மசறிங் – மன்னார்
  3.  எஸ். சியாந்த் – யாழ்ப்பாணம்

பெண்கள்

  1. ரி. டன்சிகா – கிளிநொச்சி
  2. எஸ் .டிலக்சனா – முல்லைத்தீவு
  3. கே. விழியரசி – மன்னார்

1,500 மீற்றர் ஓட்டம்

ஆண்கள்

  1. எஸ். கிந்துசன் – வவுனியா
  2. வை. துஸியந்தன் – மன்னார்
  3.  கே. ஜெயந்தன் – யாழ்ப்பாணம்

பெண்கள்

  1. எஸ். ஹேமா - முல்லைத்தீவு
  2. எஸ். விதுசா - முல்லைத்தீவு
  3. எஸ். டிலக்சனா – முல்லைத்தீவு

5,000 மீற்றர் ஓட்டம்

ஆண்கள்

  1. எஸ் .கிந்துசன் – வவுனியா
  2.  எல். தேவகரன் - முல்லைத்தீவு
  3. கே. ஜெயந்தன் – யாழ்ப்பாணம்

பெண்கள்

  1. எஸ். ஹேமா - முல்லைத்தீவு
  2. எஸ். விதுசா – முல்லைத்தீவு
  1. எஸ். டிலக்ஸனா - முல்லைத்தீவு

10,000 மீற்றர் ஓட்டம்

ஆண்கள்

  1.  எஸ். கிந்துசன் - வவுனியா
  2. கே. ஜெயந்தன் - யாழ்ப்பாணம்
  3. எல். தவகரன் – முல்லைத்தீவு

பெண்கள்

  1. எஸ். ஹேமா – முல்லைத்தீவு
  2.  எஸ். விதுசா – முல்லைத்தீவு
  3.  எல். மங்கையற்கரசி - யாழ்ப்பாணம்

110 மீற்றர் தடைதாண்டல் - ஆண்கள்

  1. ஆர். சதீஸன் – யாழ்ப்பாணம்
  2.  ஆர்.எஸ். றினோஸன் லம்பேர்ட் – மன்னார்
  3.  எஸ். ஜேசுதாஸன் – மன்னார்

100 மீற்றர் தடைதாண்டல் – பெண்கள்

  1.  ஜெ. அனித்தா – யாழ்ப்பாணம்
  2.  சி. தீபிகா – யாழ்ப்பாணம்
  3. ஏ.மேரி தயாநிதி -  கிளிநொச்சி

400 மீற்றர் தடைதாண்டல்

ஆண்கள்

  1. ஏ. அபிக்சன் - மன்னார் புதிய சாதனை
  2. எஸ். விதுசன் – முல்லைத்தீவு
  3. என். நாசாத்கன் - மன்னாரர்

பெண்கள்

  1.  யு. குயின்ஸி – கிளிநொச்சி
  2. என். சிவானுஜா – யாழ்ப்பாணம்
  3. ஏ. அனற்மேரி – மன்னார்

அஞ்சலோட்டம்

4x100 மீற்றர்

ஆண்கள்

  1. மன்னார்
  2. முல்லைத்தீவு
  3. கிளிநொச்சி

பெண்கள்

  1.  மன்னார்
  2. யாழ்ப்பாணம்
  3.  கிளிநொச்சி

4x400 மீற்றர்

ஆண்கள்

  1. மன்னார்
  2. யாழ்ப்பாணம்
  3. முல்லைத்தீவு

பெண்கள்

  1. கிளிநொச்சி
  2. யாழ்ப்பாணம்
  3. முல்லைத்தீவு

நீளம் பாய்தல்

ஆண்கள்

  1. என். நிதுஜன் – யாழ்ப்பாணம்
  2.  கே. கீர்த்திகன் – யாழ்ப்பாணம்
  3. என்.எம். பர்மன் – மன்னார்

பெண்கள்

  1. ரி. பவித்திரா – கிளிநொச்சி
  2. டி. பவித்திரா – வவுனியா
  3. ஜே. அபிசா - மன்னார்

முப்பாய்தல்

ஆண்கள்

  1. எஸ். டெனீஸன் – யாழ்ப்பாணம்
  2. எஸ். கோகுலன் – யாழ்ப்பாணம்
  3. எஸ். ஜேசுதாஸன் - மன்னார்

பெண்கள்

  1. ஏ. மேரி தயாநிதி – கிளிநொச்சி
  2.  எஸ். தேனுசா – மன்னார்
  3.  ஜே. சுகிர்தா -  கிளிநொச்சி

உயரம் பாய்தல்

ஆண்கள்

  1.  பி. நவீன்ராஜ் - மன்னார் 1.91 மீற்றர் உயர சாதனை
  2.  எஸ். யதுர்சன் – யாழ்ப்பாணம்
  3. எஸ். சரத்பாபு - மன்னார்

பெண்கள்

  1. ரி. பவித்திரா – கிளிநொச்சி
  2. கே. நிரோசினி – யாழ்ப்பாணம்
  3. சி. ஹெரீனா - யாழ்ப்பாணம்

 

கோலூன்றிப் பாய்தல்

ஆண்கள்

  1.  ஏ. புவிதரன் – யாழ்ப்பாணம்
  2. எஸ். டிலக்சன் – யாழ்ப்பாணம்
  3.  கே. நெப்தலி ஜொய்சன் – யாழ்ப்பாணம்

பெண்கள்

  1. ஜெ. அனித்தா – யாழ்ப்பாணம்
  2.  சி. ஹெரினா – யாழ்ப்பாணம்
  3.  பி. திவியா – கிளிநொச்சி

குண்டு போடுதல்

ஆண்கள்

  1. எஸ்.எம். றெஜினோல்ட் சூசை – மன்னார்
  2.  வி. லிதர்சன் – கிளிநொச்சி
  3. சி. ஜெனோஜன் - வவுனியா

பெண்கள்

  1. ஜெ. சர்மிளா – யாழ்ப்பாணம்
  2. ஆர். தர்சிகா – வவுனியா
  3.  என். ரிசாந்தினி – வவுனியா

குண்டு சுற்றி எறிதல்

 ஆண்கள்

  1. எஸ். பிரகாஸ்ராஜ் - யாழ்ப்பாணம்
  2. சி. ஜெனோஜன் – வவுனியா
  3. வி. ஜதார்த்தனன் – யாழ்ப்பாணம்

பெண்கள்

  1. எம். டொமினிக்கா – மன்னார்
  2. எஸ். லினோஜிதா – கிளிநொச்சி
  3. என். அஸ்மியா - யாழ்ப்பாணம்

தட்டெறிதல்

ஆண்கள்

  1. எஸ். பிரகாஸ்ராஜ் - யாழ்ப்பாணம்
  2. வி. ஜதார்த்தன் - யாழ்ப்பாணம்
  3. எஸ். தேவகுமாரன் – யாழ்ப்பாணம்

பெண்கள்

  1. ஆர். தர்சிகா – வவுனியா
  2. ஜெ. சர்மிளா – யாழ்ப்பாணம்
  3.  ஆர். சுஜீபா - யாழ்ப்பாணம்

ஈட்டி எறிதல்

ஆண்கள்

  1. எஸ். செந்தூரன் – யாழ்ப்பாணம்
  2.  எம். சஜீவன் – வவுனியா
  3.  ஆர். றீகன் - யாழ்ப்பாணம்

பெண்கள்

  1. வி. கிறிஸ்ரீனா – கிளிநொச்சி
  2.  கே. சாமந்தி – முல்லைத்தீவு
  3.  எஸ். கஜானி – யாழ்ப்பாணம்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .