2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ். மாவட்ட கரப்பந்தாட்டம்: சம்பியனானது புத்தூர் கலைமதி

Editorial   / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.கண்ணன்

யாழ்ப்பாண மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன், இடைக்காடு ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய, யாழ். மாவட்ட அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஏ பிரிவினருக்கான கரப்பந்தாட்டத் தொடரில், பரபரப்பான இறுதிப் போட்டியை வென்று, புத்தூர் கலைமதி அணி சம்பியனாகியது. 

இதன் இறுதிப் போட்டி, கடந்த சனிக்கிழமை, குறித்த கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில், ஆவரங்கால் மத்தி அணியை எதிர்த்து, புத்தூர் கலைமதி அணி மோதியது.

போட்டி ஆரம்பம் முதல் இறுதிவரை ஈர் அணிகளும், ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

1வது செட்டில் புத்தூர் கலைமதி அணி பலத்த போராட்டத்தின் மத்தியில் 26-24 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் 2வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஆவரங்கால் மத்தி அணி, 25-18 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பதிலடி கொடுத்தது. ஆனால் 3வது செட்டில், புத்தூர் கலைமதி அணி 25-20 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4வது செட்டில் இரு அணிகளும் தொடர்ந்து பலப்பரீட்சை நடாத்தினர். இதிலும் பலத்த போராட்டத்தில் புத்தூர் கலைமதி அணி 26-24 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது. இதில், இறுதிப் போட்டியின் நாயகனாக, புத்தூர் கலைமதி அணி வீரர் கபிலன் தெரிவு செய்யப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X