2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வடக்கின் சமர் அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி நாளை

குணசேகரன் சுரேன்   / 2018 மார்ச் 16 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டியில் மோதுகின்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிக்குமிடையிலான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி, சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

2003ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒருநாள் போட்டியில், இதுவரையில் நடைபெற்ற 15 போட்டிகளில் எட்டுப் போட்டிகளில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியும் ஏழு போட்டிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியும் வெற்றிபெற்றுள்ளன. கடந்தாண்டு நடைபெற்ற போட்டியில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

·         2014ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சென். ஜோன்ஸ் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து பெற்ற 273 ஓட்டங்கள், இதுவரையில் பெற்ற ஆகக்கூடிய ஓர் அணிக்கான ஓட்டமாகவுள்ளது.

·         2010ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஆர். எட்வேர்ட் எடின் பெற்ற 95 ஓட்டங்கள் அதிகூடிய தனிநபர் ஓட்டமாகவுள்ளது.

·         2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் கே. தீபன்ராஜ் 38 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றியமை, அதிசிறந்த பந்துவீச்சு பெறுதியாகவுள்ளது.

·         2011ஆம் ஆண்டு சென். ஜோன்ஸ் அணியின் வி. ஹரிவதனன் - ஏ. விதுசன் இணை, ஐந்தாவது விக்கெட் இணைப்பாட்டத்துக்காக பகிர்ந்துகொண்ட 103 ஓட்டங்கள் அதிகூடிய இணைப்பாட்டமாகவுள்ளது.

·         2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் விக்கெட் காப்பாளர் கே. யூனியஸ் கனிஸ்டன் எடுத்த 5 பிடியெடுப்புக்கள் அதிகூடிய தனிநபர் பிடியெடுப்பாகவுள்ளது.

·         சென். ஜோன்ஸ் கல்லூரியின் தற்போதைய அணித்தலைவர் வசந்தன் யதுசன், 2014, 2016, 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாட்டக்காரர் விருதைப் பெற்று, அதிகதடவைகள் சிறப்பாட்டக்காரர் விருதைப் பெற்றவராக இருக்கின்றார்.

சென். ஜோன்ஸ் அணி வசந்தன் யதுசன் தலைமையில் களமிறங்குகின்றது. அணியில் கனகரட்ணம் கபில்ராஜ் (அணியின் உபதலைவர்), முர்பின் அபிநாஸ், நாகேந்திரராஜா சௌமியன், செல்வகுணாலன் ஜோஜல் பிரவீன்,  தேவதாஸ் செரோபன்,  வடிவேல் அபிலக்ஸன், சாந்தகுமார் சானுசன்,  தெய்வேந்திரம் டினோசன், ஜேசுராசா சுபீட்சன் ரிப்பியுஸ், பரராஜசிங்கம் எல்சன் டேனுசன்,  சிறிகாந்தன் பிரசாந்த்,  நாகேஸ்வரன் ரதுஸன், மகேந்திரன் கேமதுசாந்த், டேவிட் ஜெநாதன் பிரசன்னா,  கிறிஸ்றி பி தனுஜன், ஆனந்தராஜன் யதுசன், சண்முகநாதன் ஜேஜீவன், நெல்சன் நித்தியானந்தன் டிலுக்ஸன், ஜெயதிலகன் மரிய திலக்ஸன் ஆகியோர் உள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, சிவலிங்கம் தசோபன் தலைமையில் களமிறங்குகின்றது. அணியில், சிறிஸ்கந்தராஜா கௌதமன் (உபதலைவர்), செல்வராசா மதுசன், அன்ரனிதாஸ் ஜெயதர்சன், சுதர்சன் துசாந்தன், சூரியகுமார் சுஜன்,  கமலராசா இயலரசன்,  இராஜரத்னம் ராஜ்கிளின்டன், சதாகரன் நிசான், விஜயகாந் விஜயகாந்த், சுரேந்திரன் டிலிசியன், சரவணமுத்து நிதர்சன், தீஸன் விதுசன், திருனேலகாந்தசிவம் ஹர்சன்னா,  சிறிதரன் சாரங்கன், மதீஸ்வரன் சஞ்சயன், திலீப்குமார் கௌதம் ஆகியோர் உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .