2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜனவரி 11 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தேர்தல் காலத்தில் தேர்தலுக்கு முன்பாக தேர்தலின்போது மற்றும் தேர்தல் நடந்து முடிந்ததன் பின்னரான அறிக்கையிடலின் அடிப்படைகள் சம்பந்தமாக இலங்கை ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் இரு நாள்  பயிற்சிப்பட்டறை நீர்கொழும்பு ஜெற்விங்க் உல்லாச விடுதியில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களும் இடம்பெற்றன.

இலங்கையின் நாலா பாகங்களிலுமிருந்தும் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் அறிக்கையிடும் தெரிவு செய்யப்பட்ட சுமார் 35 சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் இச்செயலமர்வில் பங்கு பற்றியதாக ஐபெஸ் நிறுவனத்தின் இணைப்பாளர் அஹமட் றிப்கான் தெரிவித்தார்.

இந்த இரு நாள்  செயலமர்வில் உள்ளுர் தேர்தலிற்கான தேர்தல் முறைமைகளைப் புரிந்து கொள்ளுதல், ஊடகத்தின் வகிபாகம், அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள், நடத்தை ஒழுக்கம் மற்றும் ஊடக தர நிலைகள், தேர்தல் சுழற்சி முழுவதும் அறிக்கையிடல், பெண்களின் அரசியல் பங்களிப்பை ஊடகங்களின் ஊடாக உயர்த்துவதற்கான சிந்தனைத் தெளிவுகள், பேச்சு சுதந்திரத்திற்கு சட்ட ரீதியாகவுள்ள மட்டுப்பாடுகள், வெறுப்புப் பேச்சைக் கையாளுதல், வாக்காளர் தகவல்கள் மற்றும் கல்வியூட்டல், பிரச்சார சொல்லாட்சியைக் கையாளுதல், பிரஜைகள் சார் ஊடகவியலை நடைமுறப்படுத்தல், பாலினப் பாகுபாட்டைக் கையாளுதல், பெண்களும் ஊடகமும் உள்ளிட்ட பல்வேறு விடயதானங்கள் தெளிவுபடுபடுத்தப்பட்டன.

இதில் பங்கு பற்றிய ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X