2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தொடர்ந்து 10 GS பிரிவுகளுக்கு முடக்கம்

Nirosh   / 2021 ஜனவரி 18 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கனகராசா சரவணன்)

தனிமைப்படுத்தப்பட்டுள்ள  காத்தான்குடி பிரதேசத்தில் 8 கிராம சேவகர் பிரிவை விடுவிக்கவுள்ளதாகவும் 10 கிராமசேவகர் பிரிவு தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டு அமுல்படுத்தப்படுமெனவும்,  கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

அதேவேளை கிழக்கில் 7 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், கிழக்கில் கடந்த 12 மணித்தியாலங்களில் 15  புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், கிண்ணியா பிரதேசத்தில் 4 பேரும். கல்முனை வடக்கு பகுதியில் 4 பேரும், காரைதீவு பிரதேசத்தில் ஒருவருக்கும், ஓட்டுமாவடியில் 3 பேருக்கும். மட்டக்களப்பில் 3 பேர் உட்பட15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கிழக்கில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,948 அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால்  கிண்ணியா, திருகோணமலை, கல்முனை தெற்கு. உப்புவெளி, காத்தான்குடி, மட்டக்களப்பு, காரைதீவு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் தொடர்ச்சியாக சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

தொடர்ந்தும் 730 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 12 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X