2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உடலில் 3200 துளைகள்...!

A.P.Mathan   / 2011 ஜூன் 08 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஓர் ஆணி உடலில் குத்தினாலே எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆனால் அமெரிக்காவின் மிகப்பெரும் சூதாட்ட நகரமென வர்ணிக்கப்படும் லாஸ் வேகாஸ் பிரதேசத்திலுள்ள ஸ்ரேய்ஷா ரன்டால் என்னும் 22 வயதுடைய பெண் -தன்னுடைய உடலில் 3200 துளைகளை இட்டு சாதனை படைத்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

லாஸ் வேகாஸிலுள்ள சூதாட்ட விடுதியின் நடன மங்கையான ஸ்ரேய்ஷா எப்படியாவது சாதனை படைத்துவிடவேண்டும் என நினைத்து 3600 துளைகளை உடலில் இட தீர்மானித்திருக்கிறார். தன்னுடைய விருப்பத்தினைக் கூறி அதற்கான ஏற்பாடுகளையும் அவர் மேற்கொண்டார். ஒவ்வொரு ஆணியாக உடலில் ஏற்றப்பட்டது. ஸ்ரேய்ஷாவின் கண்களில் கண்ணீரும் கசியத் தொடங்கியது. ஆனாலும் தளராத மனதோடு 3600 ஆணிகளையும் உடலில் ஏற்றத் துணிந்தார். கண்களில் கண்ணீர் கசிந்தாலும் சாதனை முயற்சியை கைவிடவில்லை.

இப்பொழுது உடலில் ஆயிரம் ஆணிகளையும் தாண்டி ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதும் தன்னுடைய வலியினை பொறுத்துக் கொண்டிருந்தார். இரண்டாயிரம் ஆணிகளையும் ஏற்றிவிட்டார்கள். தன் மனதினை கொஞ்சமும் மாற்றிக் கொள்ளவில்லை ஸ்ரேய்ஷா. மூவாயிரம் ஆணிகளை தாண்டியதும் ஸ்ரேய்ஷாவினால் வலியினை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இன்னமும் நூறு ஆணிகளை கடந்துவிட்டால் புதிய சாதனையாக கின்னஸ் புத்தகத்திலே பதியப்படும் என்பதால் வலியினை பொறுத்துக்கொண்டார்.

இதுவரை காலமும் ஒரே தடவையில் 3100 ஆணிகளால் உடலை துளையிட்டமையே உலக சாதனையாக கருதப்படுகிறது. ஆனால் ஸ்ரேய்ஷா 3100 ஆணிகளை தாண்டியும் தன்னுடலை துளையிட சம்மதித்தார். பில் 'டேஞ்சர்' ரொபின்சனும் அவரது உதவியாளர்களும் மிக வேகமாக ஸ்ரேய்ஷாவின் உடலில் ஆணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். 3200 ஆணிகளை தன்னுடலில் தாங்கியதும் அதற்குமேல் ஸ்ரேய்ஷாவினால் வலி தாங்க முடியவில்லை. எனவே 3200 ஆணிகளுடன் நிறுத்திக் கொண்டார். 3600 ஆணிகளை தன்னுடலில் துளையிடுவதற்காக அடையாளங்களை இட்டு வைத்தபோதிலும் 3200 ஆணிகளை மாத்திரமே ஸ்ரேய்ஷாவினால் தாங்கிக் கொள்ள முடிந்தது.

ரொபின்ஸனும் அவரது குழுவினரும் ஸ்ரேய்ஷாவுடன் கின்னஸ் உலக சாதனை தீர்மானக் குழுவினரின் உத்தியோகபூர்வ அறிவித்தல் வரும்வரை காத்திருக்கிறார்கள்.


 


You May Also Like

  Comments - 0

  • asker Saturday, 11 June 2011 06:39 PM

    பாவம் !ஏன் இந்த மட வேலை ,இவ்வாறான சாதனைகளை அனுமதிக்க கூடாது ,

    Reply : 0       0

    bramma Sunday, 12 June 2011 09:18 PM

    ஷி ஹேவ் குட் இன்ச்பிரஸன் அண்ட் குட் மென்டலிட்டி. வி ஆர் அப்ரிஷியேட் ஹேர்.

    Reply : 0       0

    aboo Tuesday, 13 December 2011 03:00 PM

    இதெல்லாம் தேவையா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .