2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

12 மணித்தியாலங்களில் 14 உலக சாதனைகள்

A.P.Mathan   / 2012 மார்ச் 20 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் சகலதுறை வீரருமான அன்ட்ரூ பிளின்டொப், 14 வித்தியாசமான உலக சாதனைகளைப் படைத்துள்ளார். அறக்கட்டளை ஒன்றிற்காக அவர் இந்த சாதனைகளைப் படைத்துள்ளார். 12 மணித்தியாலங்களுக்குள் அவர் இந்த 14 சாதனைகளைப் படைத்துள்ளமை சிறப்பானதாகும்.

அவரது சாதனைகளுள் சூடான சொக்லேட் பானத்தை விரைவாக அருந்துவது, அதிக பட்டாணிகளை கொக்ரெய்ல் தடியைக் கொண்டு 30 செக்கன்களுக்கு உண்பது, ஒரு மணித்தியாலத்தில் அதிக பேஸ்புக் "லைக்"குகளை செய்வது ஆகியன உள்ளடங்குகின்றன.

சூடான சொக்லேட் பானத்தை 5.45 செக்கன்களில் அருந்திய அன்ட்ரூ பிளின்டொப், ஒரு மணித்தியாலத்தில் 52,719 "லைக்"களை செய்தும், 38 பட்டாணிகளை உண்டும் கின்னஸ் சாதனை படைத்தார்.

இவை தவிர,
30 செக்கன்களில் அதிக முத்தங்கள் - 40 முத்தங்கள்
விசைப்படகில் 100 மீற்றரை வேகமாக கடந்தமை - 1 நிமிடம், 58.62 செக்கன்கள் (முன்னாள் வீரர் ஸ்ரிவ் ஹார்மிசனுடன் இணைந்து)
அதிகம் பேர் இணைந்து பார்ட்டி வெடிப்பான்களை வெடித்தமை - 420 பேர்
20 பேருக்கு விரைவாக ஐந்து போடுதல் (ஹை பைஃவ்) - 6.53 செக்கன்கள்
ஒரு நிமிடத்தில் அதிக கிரிக்கெட் பந்துகளைச் சந்தித்தமை - 19 பந்துவீச்சுக்கள்
காரில் வேகமாக மூன்று புள்ளித் திருப்பத்தை ஏற்படுத்தியமை (14.01 செக்கன்கள்)
போன்ற சாதனைகளையும் அவர் படைத்தார். (க்ரிஷ்)


You May Also Like

  Comments - 0

  • riyas Tuesday, 27 March 2012 01:57 AM

    இலங்கை நாட்டு மக்கள் உங்களை பாராட்டுகின்றனர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X