2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலகின் மிக நீளமான கிறிஸ்மஸ் கேக்

Kogilavani   / 2011 டிசெம்பர் 02 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகில் ஒரு கிலோமீற்றர் நீளமான கிறிஸ்மஸ் கேக் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1,068 மீற்றர் நீளமுடைய (3,504அடி) மேற்படி கேக்கை 80 சமையற் கலைஞர்கள் இணைந்து புடொங் ஷாங்கிரி லா ஹோட்டலில் தயாரித்துள்ளனர்.  

மேற்படி கேக்கானது கடந்த ஏழு நாட்களாக வடிவமைக்கப்பட்டு வந்தது.

904 முட்டைகள், 1045 கிலோ கிராம் கோதுமை, 209கிலோ கிராம் சீனி, 401கிலோ கிராம் சொக்லேட் மற்றும் 34 கிலோ கிராம் வெனிலா ஆகியவற்றை உள்ளடக்கி மேற்படி கேக்கை உருவாக்கியுள்ளனர்.

கேக் வடிவமைப்பின் இறுதி கட்டத்தின்போது, 150 ஊழியர்கள் இணைந்து 156  மேசைகளை பயன்படுத்தி மேற்படி கேக்கினை 24 மணி நேரத்தில் வடிவமைத்துள்ளனர்.

888 மீற்றர் (2913 அடி) நீளமுடைய கேக்கை வடிவமைப்பதற்கே இக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அவர்கள் திட்டமிட்டதை விட நீளமான கேக்கை உருவாக்கி சாதனைப்படைத்துள்ளனர்.

பிரான்ஸில் 207 மீற்றர் நீளத்தில் தயாரிக்கப்பட்ட கேக்கே இதற்குமுன் உலகின் மிக நீளமான கேக்காக பதிவு செய்யப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0

  • flower Friday, 02 December 2011 11:04 PM

    வாவ்............

    Reply : 0       0

    nilam Sunday, 04 December 2011 02:48 AM

    வீணான மனிதர்கள் ...

    Reply : 0       0

    U. Sahabdeen Sunday, 11 December 2011 06:56 PM

    வீண் விரயத்தின் உச்ச கட்டம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .