2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

காந்தி வேடத்தில் சாதனை

Kogilavani   / 2012 ஜனவரி 30 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டு ஜனவரி 30 ஆம் திகதி திங்கட்கிழமையுடன் 64 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவரை நினைவுக் கூறுமுகமாக 485 சிறார்கள் இணைந்து மகாத்மா காந்தியின் தோற்றத்தில் உடையணிந்து அரை கிலோமீற்றர் தூரம் நடைபவனியை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவின் கொல்கத்தா பகுதியில் மேற்படி நடைபவனி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கின்னஸ் சாதனைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, 10 மற்றும் 16 வயதிற்குபட்ட 485 சிறுவர்கள் இந்நடைபவனியில் பங்குபற்றினர். இது புதிய உலக சாதனையாக கருதப்படுகிறது.

இதற்குமுன் 13.06.2010 ஆம் திகதி தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் 255 சிறார்கள் காந்தி போன்று உடையணிந்து அணிவகுப்பில்  பங்குபற்றியமையே முந்தைய சாதனையாக இருந்தது.

இம்முறை கொல்கத்தாவில் இடம்பெற்ற அணிவகுப்பை மகாத்மா காந்தியின் பேத்தியான உஷா கோகானி  பார்வையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .