2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உலகின் மிகப்பெரிய சொக்லேற்

Kogilavani   / 2012 மே 17 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமெரிக்காவில் பிரமிட் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள சொக்லேற்றானது உலகின் மிகப்பெரிய சொக்லேற் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளது.

மெக்ஸிகோவில் சிச்வென் லிட்சாவில் உள்ள குகுல்கன் பிரமிட்டின் தோற்றத்தில் வடிமைக்கப்பட்டுள்ள இச்சொக்லேற் வடிவமானது 18,239 இறாத்தல் நிறையுடன் காணப்படுகின்றது. இது இரண்டு யானைகளின் நிறைக்கு சமமானதாகும்.

இந்தத் சொக்லேற்றானது இதற்கு முன்பு இத்தாலியில் வடிவமைக்கப்பட்ட 10,736.5 இறாத்தல் நிறைக் கொண்ட சொக்லேற்றின் சாதனையை முறியடித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள விசேட உணவுத்துறை நிபுணரான கசினா என்பவர் இதனை வடிவமைத்துள்ளார்.

10அடி உயரமும் 10 அடி அகலமும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மேற்படி சொக்லேட்டை உருவாக்குவதற்காக 400 மணித்தியாலங்கள் செலவிடப்பட்டுள்ளன.

சொக்லேற்  மற்றும் பேஸ்ரி கற்கை நிலையமான கசினாவின் 30 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக இந்த சொக்லேற் உருவாக்கப்பட்டுள்ளது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .