2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இராட்சத முயல்

Kogilavani   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகிலேயே மிகப்பெரிய இராட்சத முயலென்ற கின்னஸ் உலக சாதனையை பிரிட்டன், வர்செஸ்ட் நகரில் வாழ்ந்து வரும் டேரியஸ் என்ற முயல் பெற்றுள்ளது.

இம்முயலானது, மூன்றறை இறாத்தல் நிறையுடையதாகவும் 4 அடி 4 அங்குல நீளம் கொண்டதாகவும் காணப்படுகின்றது.   இது 5 வயதுடைய குழந்தையின் அளவை கொண்டதாக காணப்படுகின்றது. 

இம்முயலானது ஒரு வருடத்திற்கு 4000 கரட்டுக்களை உணவாக உட்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதத்திற்கு 30 ஆப்பில்களையும், 15 கோவாக்களையும்    உணவாக உட்கொள்வதாக அதனது உரிமையாளரான எனட் எட்வர்ட்ஸ் வயது (62) தெரிவித்துள்ளார்.

இம்முயலுக்காக 2400 ஸ்ரேலிங் பவுண்கள் செலவிடப்படுகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"இதனை வீட்டில் வளர்க்கும் நாயைப் போன்ற ஒரு செல்லப்பிராணியாகவே கருதுகின்றோம். தனது உடலுக்கு எது நல்லதோ அதனை மாத்திரமே டேரியஸ் செய்யும். டேரியசுக்கு ஒரு இடத்தில் இருப்பதற்கு பிடிக்காது, வீட்டில் எல்லா இடங்களிலும் அழைந்து திரிந்து கொண்டுதான் இருக்கும். என்னுடன் சொகுசு ஆசனத்தில் தொலைகாட்சி பார்ப்பதற்காக அமர்ந்து கொள்ளும். மேலும் இது ஏப்ரல் மாதத்தில் பிறந்ததனால் இதனை ஈஸ்டர் பனியாகவே கருதிகின்றோம்;' என அதனது உரிமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு முயல் சராசரியாக ஐந்து அல்லது ஆறு வருடங்களே வாழும். ஆனால் ஒழுங்கான கவனிப்பு இருந்தால் 7 வருடங்களையும் தாண்டி வாழும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X