2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வயதான பூனை

Menaka Mookandi   / 2014 மே 21 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகிலேயே அதிக வயதுடைய பூனை என்ற கின்னஸ் சாதனையை பொபி என்றழைக்கப்படும் 24 வயதுடைய பூனை பெற்றுள்ளது.

ஏற்கனவே கின்னஸ் சாதனையில் பதியப்பட்ட பிங்கி எனும் 23 வயதுடைய பூனை இறந்த பின்னரே இக்கின்னஸ் சாதனை பொபிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொபி 1990ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிறந்துள்ளது. அதே மாதத்தில் தென்னாபிரிக்காவின் முன்னாள் தலைவர் நெல்சென் மண்டேலா சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இப்பூனையானது இரண்டு உரிமையாளர்களிடம் தனது வாழ்ககையை கழித்து வருகின்றது.

தனது 5ஆவது வயதில் மார்கரிட் கோர்னர் என்பவர் இப்பூனையை வளர்த்து வந்துள்ளார். பொபிக்கு 10 வயதாகும்போது மார்கரிட்டின் மகள் ஜெஸ்கியூம் அவரது கணவர் அன்டியும் பூனையை வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.

தற்போது பொபி தனது உரிமையாளர் அன்டியுடனும் இரு குழந்தைகளுடனும் நான்கு பூனைகளுடனும் இரண்டு முயல்களுடனும் வாழ்ந்து வருகின்றதாம்.

இந்ந பூனை இத்தனை வருடங்கள் வாழ்வதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழலாம். எனது பூனை வீட்டைச் சுற்றி நடப்பதும் நன்றாக உணவு உண்பதனையுமே பழக்கமாக கொண்டது.

காலையில் பிஸ்கட்டுகளையே விரும்பி உண்கின்றது. பின்னர் சிறு சிற்றூண்டிகளை உண்ணும் என பொபியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தனது பூனைக்கு 24 வயதாவதை கடந்த பெப்ரவரி மாதம் கின்னஸ் சாதனைக் குழுக்கு அன்டி அறிவித்துள்ளார்.

பூனை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கின்னஸ் சாதனை அதிகாரிகள் குறித்த பூனையே தற்போது உலகில் வாழும் வயது முதிர்ந்த பூனை என்று தீர்மானித்ததுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .