2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

23 மணித்தியாலங்கள் தொடர்ந்து பாடி சாதனை

Kogilavani   / 2014 ஜூன் 23 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் இந்தூரி பகுதியைச் சேர்ந்த இசைக்குழுவொன்று புதிய கின்னஸ் சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளது. 

இடைவிடாது 23 மணித்தியாலங்களும் 10 நிமிடங்களும்  தொடர்ந்து பாடியே இச்சாதனை நிகழ்த்தப்பட்டது.

மேற்படி பகுதியைச் சேர்ந்த ரிதம் என்ற இசைக் குழவினரே இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
 
இந்த இசை நிகழ்வானது சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை காலையிலே நிறைவுபெற்றுள்ளது.

'இதனை காண்பதற்காக பார்வையாளர்கள் அதிகாலை 3 மணிக்கு மண்டபத்திற்கு வந்துவிட்டனர். பாடல்களுக்கான இசையை தொடர்ந்து வழங்கியதால் தபேலா இசைக்கலைஞர் பப்லா காஜ்பாயின் விரல்களில் இரத்தம் கசியத்தொடங்கியது. ஆனால், அவர் அதனை பொருட்படுத்தவில்லை' என ரிதம் இசைக்குழுவைச் சேர்ந்த ராஜேஷ் மிசாரா என்பவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது மொத்தமாக 212 பாடல்கள் பாடப்பட்டன. இவற்றில் 8 பாடல்கள் மீண்டும் வேறு பாடகர்களால் பாடப்பட்டன.

இந்நிகழ்வுக்கு இசை வழங்கியவர்களில் மூவர் இடைவிடாது தொடர்ந்து இசை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இவ் இசைக்குழு நிகழ்த்திய சாதனையின் வீடியோக் காட்சிகள் கின்னஸ் சாதனை அதிகாரிகளினால் மறுபரீசீலனை செய்யப்பட்டு வருகின்றது. இச்சாதனைக்கான சான்றிதழ்கள் எதிர்வரும் வியாழக

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .