2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

2.9 கிலோமீற்றர் நீளமான திருமண ஆடை

Kogilavani   / 2011 செப்டெம்பர் 26 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இத்தாலியைச் சேர்ந்த மணப்பெண்ணொருவர் தனது திருமணத்தின்போது, 1.8 மைல் (2.9கிலோமீற்றர்) கிலோமீற்றர் நீளமான திருமண ஆடையை அணிந்து புதிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.

எலினா டீ ஏஞ்செல்ஸ் என்ற இப்பெண் தனது திருமண நாளானது பரப்பராக பேசப்பட வேண்டுமென்பதோடு  சாதனையாக பதியப்படவேண்டுமென நினைத்து அவர் இவ்வாறான  ஆடையை வடிவமைப்பதற்கு திட்டமிட்டார்.

அவரின் விருப்பத்திற்கேற்ப கியானி மொலோரோ கம்பானியா என்பவர் 2.9 கிலோமீற்றர் நீளமான இந்த ஆடையை வடிவமைத்துக் கொடுத்தார்.
திருமணத்தன்று மணமகள் எலினா வீதியில் திறந்த காரில் சென்றபோது, அவரது வெள்ளை நிற திருமண ஆடையை 600 இற்கும் மேற்பட்டவர்கள் சுமந்த வண்ணம் பின்னால் நடந்து வந்தனர்.

பேரிடினன்ட் புசி என்பவரை எலினா திருமணம் செய்துகொண்டார். இத்தாலியின் நேபிள்ஸிலுள்ள காஸல் டீ பிரின்ஸிப் எனும் நகரில் இத்திருமணம் நடைபெற்றது.

இந்த ஆடை தற்போது உலகின் மிக நீளமான திருமண ஆடையாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஆடை வடிவமைப்பாளரான மொலோரோ கருத்துத் தெரிவிக்கையில்,  இந்தத் திருமண ஆடையை வடிவமைக்குமாறு கோரப்பட்டமைக்ககாக நான் கடமைப்பட்டுள்ளேன். நான் தேவாலயத்தில் செல்லும் வழியில் பல்லாயிரக்கணக்க மக்கள் இதை பாராட்டினர்' எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • abdul Tuesday, 27 September 2011 08:34 PM

    இவர்கள் திருமணம் எவ்வளவு நாள் நீடித்திருக்கும்?

    Reply : 0       0

    RRRR Wednesday, 28 September 2011 10:31 PM

    ரொம்ப ஓவரா இல்ல !

    Reply : 0       0

    written by inj Sunday, 02 October 2011 02:12 AM

    நீளமான ஆடை உடுத்து வேலை இல்லை நீண்ட நாள் ஒன்றா வாழ்தால் சரிதான்.

    Reply : 0       0

    cool Wednesday, 26 October 2011 12:57 PM

    ஆடை எவ்வளவு நீளம் என்றாலும் முன் அங்கம் மறைக்க போதாதே ஏன் இந்த கோலம்? ஆடை எவ்வளவு நீளம் என்றாலும் அது அணிவதில்தான் அழகு உண்டு. திஸ் மை பாயிண்ட்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .