2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கனடாவின் பாதுகாப்பு கட்டமைப்பு மாற்றங்கள்

Editorial   / 2019 ஜூன் 10 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனகன் முத்துக்குமார்

மாலி, ஒகஷாகு மனிதப்படுகொலையில் 161க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்ற செய்தி ஒரு புறம், இஸ்லாமிய ஆயுததாரிகளால் கைப்பற்றப்பட்ட மாலிப் படையினரின் கொலை, அதேபோல் மாலி பிரதமர் சவுமெயிலோ பௌபேய் மியாகாவினரி இராஜினாமா, அந்த நாட்டில் உண்மையில், மாலியில் ஐக்கிய நாடுகளின் பல மட்டத்திலான ஒருங்கிணைந்த உறுதிப்படுத்தலுக்கான திட்டம்தொடர்ச்சியாக இருக்கவும், அது தனது பகுப்பாய்வு, மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு என்பவற்றை பேணவும், அதன் காரணமாக, அது தன் செயல்பாட்டின் கட்டமைப்பிற்கு கணிசமான முன்னேற்றத்தை எதிர்பார்க்கின்றது.

நிலைமை இவ்வாறிருக்க, கனேடிய அரசாங்கம் அடுத்த மாதத்துக்கு அப்பால் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இந்த முயற்சியை விரிவுபடுத்துவதை நிறுத்துவதாகவும், அதன்படி, ஏற்கெனவே ஒப்புக்கொண்டதை மறுதலித்து, ஒரு ஆண்டு பணி இருப்பதற்கு முன்னதாக குறித்த பிராந்தியத்தில் தனது ஐக்கிய நாடுகளின் வின் கீழான செயல்பாட்டை குறைப்பதாக அறிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல்களின் வெற்றி மீண்டும் கனடாவை மீண்டும் அமைதிகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான யோசனையை முன்வைத்திருந்தது. துரதிர்ஷ்டவசமாக, எனினும், இந்த அமைதிகாப்பு பணியில் கனடாவின் பிரத்யேக ஈடுபாடு, இத்தகைய பயணங்கள் செய்ய 600 படைகளை உறுதிப்படுத்துவதில் இருந்த சிக்கல்கள், கனடாவின் பங்கை தொடர்ச்சியாகவே கேள்விக்குட்படுத்தியிருந்தது. மறுபுறத்தில், பல அரசியல் நிபுணர்கள் மாலியில் முன்னேற்றம் இல்லாமை மற்றும் வளங்கள் அடிப்படையில் ஒரு வலுவான அர்ப்பணிப்பு தேவை பற்றி தங்கள் கவலைகளை தெரிவித்தவண்ணம் இருக்கின்ற போதிலும்,கனடிய அரசாங்கம் அமெரிக்கா மற்றும் மேற்கைரோப்பிய நாடுகளை போல தொடர்ச்சியாக சர்வதேச பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய வகையில் அதன் உள்ளக அரசியல் மற்றும் வெளிவிவகார கொள்கைகள் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவின் இவ்வாறான வெளிவிவகார கொள்கைக்கு பல்வேறான சான்றுகள் உள்ளன. முதலாவதாக, கனடாவின் 2019-2020 க்கான தேசிய பாதுகாப்பு செலவீனத் திட்டங்களில் சர்வதேச பாதுகாப்புக்கான செலவீனங்கள் தொகையாக தீர்மானிக்கப்பட்ட தொகை மிகவும் குறைவானது. கனடா இக்காலகட்டத்தில் தனது தேசிய பாதுகாப்பை பொறுத்தவரை Operation LIMPID, REASSURANCE, and FOUNDATION ஆகிய மூன்று துறைகளிலேயே தனது பார்வையை செலுத்துகின்றது. அதன் படி, Operation LIMPID நிலம், கடல்வழி, விண்வெளி மற்றும் இணைய களங்கள் உட்பட நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கூடிய விடயங்களை கனடாவின் பாதுகாப்பு மற்றும் இராணுவம் செயல்படுத்துவதற்கு குறிக்கின்றது. மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் தென் மேற்கு ஆசியா ஆகிய நாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளை மேற்கொள்வது, அது தொடர்பாக குறித்த அரசாங்கங்களுக்கு உதவி வழங்கல் தொடர்பில் FOUNDATION துறையும், மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் பிரசன்னத்தை சுமந்து செயல்படுவதற்கு REASURANCE துறையூடாகவும் கனடா முனைப்பை காட்டுகின்றது. இதை தவிர, கனடா தற்போது வேறெந்த பாதுகாப்பு துறையிலும் தனது பார்வையை திருப்பவில்லை, திருப்புவதற்கு தற்போதைய சர்வதேச அரசியல் நிலைமைகளை பொறுத்தவரை காரணங்கள் இல்லை என்பதனை ஒரு புறமாக உணரலாம்.

மறுபுறத்தில், கனடாவின் உள்ளக அரசியலை பொறுத்தவரை, மாலியில் பெருமளவிலான பாதுகாப்பு செலவீனங்களை மேற்கொள்வதை லிபரல், பழமைவாதக் கட்சியினர் ஒருபோதுமே பெருமளவில் விரும்பவில்லை. ஆயினும், ஆரம்ப நாட்களில் லிபரல் கட்சி தனது வெளிவிவகார கொள்கையை பழமைவாதக் கட்சியின் 10 ஆண்டுகால வெளிவிவகார கொள்கையில் இருந்து பிரித்துக்காட்டுவதற்காக பழமைவாதக் கட்சியின் விமர்சனங்களையும் தாண்டி மாலியில் பாதுகாப்பு செலவீனங்களை செய்திருந்தது. பழமைவாதக் கட்சி மாலியில் கனேடிய இராணுவம் நிலைகொள்வது ஒரு போருக்கான நடவடிக்கை என்றே வர்ணித்திருந்தது. ஆயினும், இவ்வாண்டு கனடாவுக்கான அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் ஆண்டாகும். லிபரல், பழமைவாதக் கட்சிகளிடையே போட்டிநிலைமை உள்ள இந்நிலையில் கனடிய அரசாங்கத்தை அமைத்துள்ள லிபரல் கட்சி தொடர்ச்சியாக மாலியில் பாதுகாப்பு செலவீனங்களை மேற்கொள்ளல், அதன் காரணமாக பழமைவாதக் கட்சி அதை ஒரு தேர்தல் பேசுபொருளாக்குவதை விரும்பவில்லை.

மறுபுறம், ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம், நேட்டோ பாதுகாப்புக்காக எல்லா உறுப்புரிமை நாடுகளும் தங்களது பங்கை செலுத்தவேண்டும் என வலியுறுத்தியமை, கனடா தனது மொத்த வருமானத்தில் இரண்டை செலுத்தவேண்டிய நிலையில் உள்ளது. இது ஏற்கெனவே கரடுமுரடாக உள்ள அமெரிக்க - கனடா வெளியுறவு கொள்கை சுமூகமான நிலைக்கு இட்டுச்செல்லும் என இரு பகுதியினரும் கருதுகின்றனர். இந்நிலையில், பாதுகாப்பு செலவீனங்களை மறுபுறங்களில் கட்டுப்படுத்துவதன் மூலமாகவே, கனடா நேட்டோவின் மேம்பாட்டுக்கு ஏற்கனவே வரையறுத்தது போல பாதுகாப்பு செலவீனங்களை 2023 இல் செலுத்த முடியும். இந்நிலையில் மாலியில் தொடர்ச்சியாக இராணுவ செலவீனங்களை மேற்கொள்ளுதல் கனடாவுக்கு அவசியமானது ஒன்றல்ல என்பதும் இன்னொரு காரணமாகும்.

இவற்றுக்கு மேலாக (மூன்றாவதாக), உலகளாவிய புவிசார் அரசியல் கனடாவின் மாலியில் தொடர்ச்சியாக இராணுவ செலவீனங்கள் செய்வதை நிறுத்துவதற்கு காரணமாகின்றது. பனிப்போருக்கு பிந்திய காலப்பகுதி, குறிப்பாக 9/11 பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் பிராந்திய மற்றும் சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதில் கனடா ஒரு முன்னோடியாகவே செயல்பட்டது. எனினும், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் உருவாக்கம், அது எவ்வாறாக அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களை ஒன்றிணைத்து கனடா உட்பட பல மேற்கத்தேய நாடுகளில் தாக்குதல்களை மேற்கொண்டமையானது, பயங்கரவாதத்துடன் நேரடியாக போரிடுவதை காட்டிலும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தல் அவசியமானது என்ற கொள்கைக்கு கனடா உட்பட பலநாடுகள் வந்துள்ள இந்நிலையில், கனடாவை பொறுத்தவரை, தொடர்ச்சியாக இராணுவ செலவீனங்களை செய்தல் கனடாவுக்கு தேவையற்ற ஒன்றெனவே கனடாவின் இராணுவ வெளிவிவகார கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர்.

மேலும், ஆர்க்டிக் பிராந்தியத்தில் கனேடிய இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கான அவசரநிலை மீண்டும் தோன்றியுள்ள நிலையிலும், பனி உருகும் மற்றும் புதிய வர்த்தக வாய்ப்புகள் ஏற்படுகையில், வளங்களை அணுகுவதற்கான போட்டி மற்றும் வர்த்தக வாய்ப்புகள் இப்பகுதியை மேலும் இராணுவமயமாக்கலாம் என்ற நிலைமையிலும், உண்மையில், ஆர்க்டிக்கில் பல நாடுகளும் ஏற்கனவே தங்கள் இராணுவ நிலைகளை ஏற்படுத்த முயலுகின்ற நிலையிலும் கனடா தொடர்ச்சியாக அதிகப்படியான இராணுவ செலவீனங்களை முதலீடு செய்வதற்கு தேவைகள் அதிகரித்ததாகவே இருக்கின்றது.

இவ்வாறான கனேடிய இராணுவ மற்றும் அரசியல் நகர்வுகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையிலேயே மாலியிலிருந்து கனடா வெளியேறல் தொடர்பான நிலைமை பார்க்கப்பட வேண்டியதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .