2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொரோனா தொற்று ஆயிரத்தைக் கடந்தது

S. Shivany   / 2020 நவம்பர் 24 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பொலிஸாரின் எண்ணிக்கை 1,039 ஆக அதிகரித்துள்ளதாக, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

மேற்படி தொற்றாளர்களிடையே பொலிஸ் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த 238 பேர் அடங்குகின்றனர்.

கொவிட் தொற்றாளர்களாக நேற்று பதிவான 337 பேரில் இருவர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,508 ஆக அதிகரித்துள்ளதுடன், 90 மரணங்களும் சம்பவித்துள்ளன. 

337 பேர் நேற்று(23) அடையாளம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 337 பேர் நேற்று(23) அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,508 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை கொரோனா தொற்றினால் 3 மரணங்களும் நேற்று(23) பதிவாகியுள்ளன.  தொற்றிலிருந்து இதுவரை 14,497 பேர் பூரண குணமடைந்துள்ள அதேவேளை, 5,921 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .