2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிலையான விலை

Gavitha   / 2021 ஜனவரி 19 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெப்ரவரி மாதம், 1ஆம் திகதி தொடக்கம், 10 அத்தியாவசிய பொருள்களின் விலையை, நிலையானதாக முன்னெடுப்பதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து தெரிவிக்கையில், 6 மாத காலத்துக்கு விஸ்திர விலையை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்று கூறியுள்ளார்.

இந்தப் பொருள்களின் விலையை, 6 மாதங்களுக்கு நிலையானதாக முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் புதிதாக வரி விதிக்கப்பட்டால், அல்லது வெளிநாட்டு நாணயத்தில் மாற்றம் ஏற்பட்டால், இந்த பொருள்களின் விலையில் மாற்றம் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார்.

உள்ளூர் உற்பத்தியாளர்கள், நேரடியான முதலீட்டாளர்களிடம் இருந்து இது குறித்த ஆலோசனைகளை பெறவுள்ளதாவும் 22ஆம் திகதி வரைக்கு இது குறித்த ஆலோசனைகளை சமர்ப்பிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .