2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

105 மில்லியன் ரூபாய் அபராதம் அறவீடு

Editorial   / 2020 ஜூலை 09 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக மின்சார இணைப்புகளை பெற்றவர்களிடம் 105 மில்லியன் ரூபாய் அபராதம் அறவிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இந்த அபராத தொகை அறவிடப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மின் இணைப்புகள் பெற்றமை தொடர்பில் 1,930 சுற்றிவளைப்புகள் கடந்த வருடத்தில் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மீற்றர்களை மாற்றி அமைத்தல், சட்டவிரோதமாக பிரதான மின்கம்பியிலிருந்து மின் இணைப்பை பெற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .