2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

1200 கி.கி போதைப்பொருள் ஏப்ரல் முதல் வாரத்தில் அழிப்பு

Editorial   / 2019 மார்ச் 20 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 1,200 கிலோகிராம் அளவிலான போதைப்பொருளை அழிப்பதற்கான நடவடிக்கைகள், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளரும் விசேட வைத்திய அதிகாரியுமான சமந்த கித்தலவல ஆராய்ச்சி தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டுமான பணிகளில், 10ஆயிரம் வரையான ஊழியர்கள் சேவையில் ஈடுபடுகின்றனர் என்றும் அதில் நூறுக்கு 80 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுவருவதாகவும் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுபில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் குறித்த ஊழியர்களில் அதிமானோர், போதைப் பொருள் வர்த்தகத்திலும் ஈடுபட்டுவருவதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X