2024 மார்ச் 28, வியாழக்கிழமை

20 மில்லியன் இலஞ்ச விவகாரம்: இருவரது விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2018 ஜூன் 20 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

20 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக வாங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினது பணியாட்தொகுதியின் முன்னாள் பிரதானி கலாநிதி கே.மஹாநாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி.திஸாநாயக்க ஆகியோரது விளக்கமறியல், மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், நேற்று (05) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே, பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க, மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.   
கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்கு உரித்தான கட்டடம் மற்றும் இயந்திர உபகரணங்களை ஒப்படைப்பதற்காக, இந்திய வர்த்தகரிடமிருந்து, 560 மில்லியன் ரூபாயை இவர்கள் இலஞ்சமாகக் கோரியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   
இறுதியில், 200 மில்லியன் ரூபாய்க்குச் சம்மதித்துள்ள அவர்கள், முற்கொடுப்பனவாக 20 மில்லியன் ரூபாயை, கொழும்பிலுள்ள சொகுசு ஹோட்டலொன்றின் கார் தரிப்பிடத்தில் வைத்துப் பெற்றுக்கொள்ளும்போது, மே மாதம் 3ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X