2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’2020 ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியே’ துமிந்த உறுதி

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக யாரை களமிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டார்கள் என தெரிவித்த அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடக்கூடிய தகுதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாத்திரமே இருப்பதால், அவரே மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார் எனவும் தெரிவித்தார்.

"நாடாளுமன்ற உறுப்பினர், டிலான் பெரேராவின் கருத்துக்களை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டது கிடையாது. சுதந்திர கட்சியின் செயலாளர் என்ற வித்தில் கட்சி தலைமையினால் எடுக்கப்படும் தீர்மானத்தை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் செயற்பாட்டினையே முன்னெடுக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

கமத் தொழில் அமைச்சில் நேற்று (18) புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான, துமிந்த திசாநாயக்க  இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

"பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போது வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாது விலகி இருக்க வேண்டும் என்றே நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெற்ற 4 ஆம் திகதி காலையில் எமது கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் எமது கட்சியை சேர்ந்த 16 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

வாக்களித்தற்காக இவர்களை குறைக்கூறவோ அல்லது விமர்சிக்கவோ நாம் விரும்பவில்லை. ஆனால் இவர்கள் கட்சிக்கு சேறுபூசம் நடவடிக்கையில் ஈடுபடுவார்களேயானால், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக இவர்கள் ஏன் வாக்களித்தார்கள் என்ற உண்மை அம்பலப்படுத்தப்படும்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து தங்களது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகியுள்ள 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்துக்கொண்டே எதிர்க் கட்சியாக செயற்படுவார்கள். அவர்கள் வேறு எந்த கட்சிக்கும் செல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியினர், 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடிய ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்துவிட்டார்கள்.அதேபோல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் மைத்திரிபால சிறிசேனவே களமிறக்கப்படுவார். அதற்கான தகுதியும் சுதந்திரக் கட்சியில் அவருக்கு மாத்திரமே காணப்படுகின்றது."


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X