2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

26 வருடங்களின் பின்னர் மூவருக்கு மரண தண்டனை

Editorial   / 2018 ஜூலை 17 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயல்வீட்டு நபரொருவரை கத்தியால் குத்தி கொலை செய்தமை மற்றும் அவரது மனைவியை கத்தியால் குத்தி படுகாயமடையச் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மூவரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சி, அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதுடன், தலா  7 ½ வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து இன்று (17) தீர்ப்பளித்தார்.

பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த, மூவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் இக் கொலையை செய்துள்ளனர் எனவும், தொடர்ந்து வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் தகுந்த சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளிகள் எனக் கருதி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .