2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

3 கட்டளை சட்டங்களில் நாளை திருத்தம்

Editorial   / 2017 செப்டெம்பர் 25 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான, கட்டளைச்சட்டங்கள் மூன்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதனடிப்படையில், அந்தத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக, நாடாளுமன்றத்தில் நாளை (26) விசேட அமர்வு இடம்பெறவுள்ளது.   

பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை ஆகியவற்றுக்கான மூன்று கட்டளைச் சட்டங்களே திருத்தப்படவுள்ளன. இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு, 70 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, விசேட சபையமர்வு இடம்பெறவுள்ளது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.  

அன்றையதினம், பிற்பகல் 2:30 இலிருந்து 4:30 மணிவரையிலுமே இந்த விசேட சபையமர்வு இடம்பெறும்.  

இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது தேர்தல், உள்ளூராட்சிமன்ற தேர்தலாகதான் இருக்கும் என்று, அரசியல் நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.   

உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தலா அல்லது மாகாண சபைகளுக்கான தேர்தலா முதலில் நடைபெறும் என்பது தொடர்பில், நம்பிக்கையில்லாத நிலைமையொன்றே தற்போது தோன்றியுள்ளது.   

எனினும், மாகாண சபைகள் (திருத்தச்)சட்டமூலம், நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளமையால், கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு, அரசமைப்பின் ஊடாக, கட்டளைகள் கிடைத்துள்ளன.   

இதேவேளை, மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்த​ல்களை நடத்தவேண்டுமாயின், அந்தந்த நிறுவனங்களுக்கு உரிய சட்டமூலங்கள் திருத்தப்படவேண்டும்.   

திருத்தங்களை மேற்கொள்வதற்கு, டிசெம்பர் வரையிலும், அரசாங்கத்துக்கு, காலஅவகாசம் தேவைப்படுகின்றது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .