2024 மார்ச் 28, வியாழக்கிழமை

3 பேருக்கும் விளக்கமறியல்

Editorial   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை நடைபெற்ற, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான இரசாயனவியல் பாடத்தின் பகுதி  2க்கான வினாக்கள் சிலவற்றை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்களைத் தயாரித்தார் என்ற சந்தேகத்தின் பேரில், ஒருவரைக் கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். 

கம்பஹா நகரில் வைத்தே அவரைக் கைது செய்துள்ளதாவும், அவ​ரே, அந்தத் துண்டுபிரசுரத்தை கணினியில் வடிவமைப்புச் செய்தவர் என்றும்  ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  

அவருக்குக் கிடைத்த வினாக்கள் சிலவற்றை உள்ளடக்கியே, இந்தத் துண்டுப்பிரசுரத்தை தயாரித்துள்ளார் என்றும் அந்தப் பரீட்சை நடைபெற்ற 19ஆம் திகதியன்றே, வினாக்களும் கிடைத்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  

கைது செய்யப்பட்டுள்ள கணினி வடிவமைப்பாளரான இவர், களனி பிரதேசத்தைச் சேர்ந்தவர்க என்றும் கம்பஹா நகரில் உள்ள கணினி மத்திய நிலையத்தில் சேவையாற்றுபவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரையும் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவர்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X