2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

340 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

Editorial   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுகர்வோர் அதிகாரசபையின் சட்டத்திட்டங்களை மீறிய 340 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த மாதம் 9ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பண்டிகைக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு 510 சுற்றிவளைப்புகள் நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதில் அபராதப் பணமாக 13,96,000 ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 21,118 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் 21,254 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .