2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

5 இலட்சம் வாக்களர்களுக்கு அடையாள அட்டை இல்லை

Editorial   / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அடையாள அட்டை இல்லாமல் 5 இலட்சம் பேர் இலங்கையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 3 இலட்சம் பேர் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எனவும், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான தகவல்கள் இன்மையே அடையாள அட்டை இல்லாமைக்கான காரணம் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் பிறப்புச்சான்றிதழ் இல்லாதவர்கள் ஏனைய தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து அடையாள அட்டையைப் பெறும் வேலைத்திட்டம் ஒன்று ஏற்பாடாகி வருவதாகவும் ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் சகல  மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள் தமக்கு நெருங்கிய உறவு அல்லது பிரதேசவாசிகள் மூவருடன் உறுதிப்படுத்துவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்பு வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டையினைப் பெறுவதற்கான தற்காலிக வேலைத்திட்டம் என்றும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .