2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

5 வருடங்களில் இவ்வருடமே அதிக வருமானம்

Editorial   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 5 வருடங்களில் இந்த வருடமே அதிக வருமானம் கிடைத்துள்ளதாக, அதிவேக நெடுஞ்சாலைகள் மேற்பார்வை, வழிநடத்தல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் நேற்று (17) வரை அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக 345 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக, அதிவேக நெடுஞ்சாலைகள் மேற்பார்வை, வழிநடத்தல் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் வருமானமானது 10 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் 1.3 மில்லியன்  வாகனங்கள் நெடுஞ்சாலைகள் ஊடாகப் பயணித்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த 11ஆம் திகதி மாத்திரம் ஒரு நாள் வருமானமாக 3 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதென்றும் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாத்தறை- பெலியத்தைக்கிடையில் புதிதாக ரயில் வீதி திறக்கப்பட்டுள்ளமைக்கு அமைவாக, கடந்த சில தினங்களில் மாத்திரம் 3 இலட்ச ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதென, ரயில் போக்குவரத்து அதிகாரி காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X