2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

7 நாள்களில் 1536 சாரதிகள் கைது 42,114 பேருக்கு எதிராக வழக்கு

ஆர்.மகேஸ்வரி   / 2019 ஏப்ரல் 17 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி தொடக்கம் இன்று  (17) காலை 6 மணி வரை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்  போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய, 1536 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில்  இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

புத்தாண்டு காலத்தையொட்டி நாடு முழுவதும் பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் கடந்த 11ஆம் திகதி தொடக்கம் இந்த விசேட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாகவும், இதன்போது மது போதையில் வாகனம் செலுத்திய 1536 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து சட்டத்திட்டங்களை மீறிய 42,114 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

.மேலும் இந்த மாதம் 11ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 13 கொலைச் சம்பங்கள் பதிவாகியுள்ளதுடன், இதில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனரென்றும், இக்கொலைகளுக்கு பிரதான காரணம் மதுபோதை என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன் புத்தாண்டு முதல் நாளான 13ஆம் திகதியிலிருந்து இன்று (17) வரை 31 வாகன விபத்துக்கள் மூலம் 42 பேர் உயிரிழந்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்ற போதிலும் குறித்த 31 விபத்துக்களும் தடுத்திருக்க கூடிய விபத்து என்றும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .