2024 மார்ச் 28, வியாழக்கிழமை

7 பேரை கொன்ற 7 புலிகளுக்கு 56 வருட சிறை

Editorial   / 2017 டிசெம்பர் 14 , மு.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளின், கிளைமோர் குண்டுகளை வெடிக்கவைக்கும் பிரிவைச் ​சேர்ந்த ஏழு பேருக்கு, தலா 8 வருடங்கள் என்ற​ அடிப்படையில், 56 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் விசேட மேல்நீதிமன்றின் நீதிபதி மஹேஷ் வீரமன், மேற்படி தண்டனை நேற்று (13) விதித்தார்.

வில்பத்து தேசிய வனாந்தரத்துக்கு, விசாரணை ஒன்றுக்காகச் சென்ற வைத்தியர் ஒருவர் உள்ளிட்ட உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 7 பேரை ஏற்றிச் சென்ற கெப் வாகனத்தை இலக்குவைத்தே கிளைமோர் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது.

அங்கிருந்தவர்களை கொலை செய்தமை உள்ளிட்ட 8 குற்றங்களுக்காகவே அவர்களுக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த 7 பேருக்கு எதிராகவும் சட்டமா அதிபரால் தனித் தனியாக சுமத்தப்பட்டிருந்த 8 கடுமையான குற்றங்களையும் அவர்கள் ஏற்றுக்கொண்ட பின்னரே இவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது..

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிளைமோர் குண்டுப் பிரிவைச் ​சேர்ந்த, சிமியோன் சந்திரயோகு, ராகவன், சுரேஸ், புதியவன் சிறில் ராசமணி, சீராலன் சின்னப்பன் பாக்கியநாதன், முத்து மரிக்கார், அப்துல் சலீம எனப்படும் சலீம் ஐயா சாந்தன், ஸ்​டெனிஸ் ரெமிஸ்வல்லவன் மற்றும் நடராஜா சரவணபவன் ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X