2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அடையாள அட்டையை பெற்றுக் கொடுப்பதில் அக்கறையில்லாத அதிபர்கள்

Editorial   / 2018 மே 22 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.

சில அதிபர்கள் அடையாள அட்டையை பெற்றுகொள்ள தேவையான மாணவர்களின் விண்ணப்பங்களை இதுவரையில் தமது திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கவில்லை என்று ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் தெரிவித்தார்.

இம்முறை பரீட்சைக்கு 350,000 மாணவர்கள் தோற்றவுள்ளனர். இருப்பினும் தேசிய அடையாள அட்டையை பெற்றுகொள்வதற்காக 60 சதவீதமான மாணவர்களின் விண்ணப்பங்களே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான விண்ணப்பங்களை மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அனைத்து அதிபர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அனுப்பப்பட்ட விண்ணப்பங்களில் முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் பல இருப்பதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டையை பெற்றுகொள்வதற்காக இறுதி நேரத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதன் மூலம் ஆட்பதிவு திணைக்களம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இதனால் கூடிய விரைவில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பாடசாலை அதிபர்களிடம் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .