2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’அத்தியாவசியப் பொருட்களை கொண்டுசெல்லத் தடையில்லை’

Niroshini   / 2021 மே 06 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோ​னா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் காணப்படும் மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களைக் கொண்டுசெல்லத் தடை விதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள இராணுவத் தளபதி ​ஜெனரல் ஷவேந்திர சில்வா, குறித்த சேவைகளை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உணவுப் பொருட்கள் அடங்கிய வாகனங்கள்,  மரக்கறி லொறிகள் போன்றன, குறித்த பிரதேசங்களுக்குச் செல்ல முடியுமென்றும் தெரிவித்துள்ள அவர், கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தொடர்பில், சுகாதாரத் தரப்பினர் அதிக அவதானத்துடன் இருப்பதைப் போன்று, பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.

13 மாவட்டங்களைச் சேர்ந்த 90 பொலிஸ் பிரிவுகள், நேற்று (05) காலை வரையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்துள்ள அவர், சித்திரைப் புத்தாண்டைத் தொடர்ந்து, நாட்டுக்குள்ளிருந்து ஒரு நாளைக்கு 1500க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .