2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அதிபர்களுக்கான நேர்முகத் தேர்வு ஆரம்பம்

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிலுள்ள, 302 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு,  கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கான நேர்முகப் பரீட்சை இன்று (16), ஆர்பமாகியதுடன்,  நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான அறிவித்தல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த காலங்களில்,  உரிய முறையில் தேர்வு நடத்தப்படாமையின் காரணமாக, பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. எனவே,தேசியப்  பாடசாலைகளில் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தை முறையாக முன்னெடுக்கும் வகையில், தகுதிவாய்ந்த அதிபர்களை,  பதவி தர அடிப்படையில்  நியமிப்பதன் தேவை அடையாளம் காணப்பட்டடுள்ளது.
302 பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களைப்  பூரணப்படுத்துவதற்கும், எட்டு வருட காலத்துக்கும் மேலாக ஒரே பாடசாலையில் பணியாற்றும் அதிபர்களை,  ஏனைய பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யவும், அரச சேவை ஆணைக் குழுவின் அங்கீகாரத்துடன்,  கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .