2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் கிழக்கு ஆளுநர்

Nirosh   / 2021 மே 06 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம், தீஷான் அஹமட்

கிழக்கு மாகாணத்தில் உள்ள 7 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் 19 சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு, ஆளுநர் அனுராதா யஹம்பத் உத்தவிட்டுள்ளார்.

இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதருக்கு, ஆளுநர்  அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலுள்ள 283 கொரோனா நோயாளிகளுக்கு இந்த ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

திருகோணமலை - கப்பல்துறை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் 50 பேருக்கும், நிலாவேலி ஆயுர்வேத வைத்தியசாலையில் 48 பேருக்கும், மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத வைத்தியசாலை 60 பேருக்கும், எறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் 30 பேருக்கும் சிகிச்சையளிக்கப்படவுள்ளன.

அத்துடன், அம்பாறை - வேரண்கரகொட மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் 30 பேருக்கும் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை 30 பேருக்கும் அட்டாளைச்சேனை தள வைத்தியசாலையில் 30 பேருக்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கொவிட் - 19 தொற்றாளர்களுக்கு ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிப்பதற்கான அனுமதியை கொவிட் - 19 தொடர்பான இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளை வழங்கியிருந்தார்.

இதனையடுத்தே, கிழக்கு மாகாணத்திலுள்ள மேற்படி 7 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் - 19 சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு மாகாண ஆளுநர் பணித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .