2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அநுரகுமார மௌனம் ஏன்?

Editorial   / 2018 ஜூலை 16 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை - சிங்கப்பூர் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில், நாடாளுமன்றில் நாளை (17) இடம்பெறவுள்ள சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்துகளை அறிந்துக்கொள்வதற்கு, ஒன்றிணைந்த எதிரணியினர் விருப்பத்துடன் உள்ளனரென, நாடாளுமன்ற உறுப்பினர் சிசிற ஜயகொடி தெரிவித்துள்ளார்.

குறித்த உடன்டிக்கை தொடர்பில், இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கவில்லை எனவும், நாட்டுக்குப் பங்கம் விளைவிக்கும் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டிருக்கும் நிலையில், அநுரகுமார மௌனமாக இருப்பது தொடர்பில் தமக்குச் சந்தேகம் எழுந்துள்ளதாகவும், சிசிற ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்துக்குள் போதைப்பொருள் பக்கெட் இருந்தாலும் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிக்கும் மக்கள் விடுதலை முன்னணியினர், சிங்கப்பூர் உடன்படிக்கை தொடர்பில் மௌனிகளாக உள்ளனரெனச் சந்தேகம் வெளியிட்ட அவர், தற்போதைய அரசாங்கம், நாட்டுக்குச் சாதகமற்ற ஒரு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டுள்ள நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்தே, தனது காலத்தைக் கடத்தி வருகிறாரெனவும் குறிப்பிட்டுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .