2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘அனுமதியின்றி வேறுநாடு செல்லக்கூடாது’

Editorial   / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள எந்தவொரு எம்.பியும், எழுத்துமூல அனுமதியின்றி, வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பணிப்புரை விடுத்துள்ளார்.  

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம், அலரிமாளிகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தக் கூட்டத்தின் போது, மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் மற்றும் அடுத்த கட்டமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விரிவாக ஆராயப்பட்டுள்ளன.   

மத்திய வங்கி பிணைமுறி விசாரணையில் பூரண ஒத்துழைப்பை வழங்குவது என்றும் தேவை ஏற்படின், தானே நேரில் சென்று சாட்சியமளிக்கத் தயார் என்றும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார். கண்டிக்கான நெடுஞ்சாலை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை நிலைமை தொடர்பாகவும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்தக் கூட்டத்தில் விளக்கமளித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .